இளவரசி டயானாவுடன் வாழும்போதே கமீலாவுடன் தொடர்புவைத்திருந்த சார்லஸ்: முடிசூடுவதில் சிக்கல்?
இங்கிலாந்து திருச்சபை இதுவரை இப்படிப்பட்ட ஒரு மன்னருக்கு முடிசூட்டியதில்லை என்று கூறி, புதிய சர்ச்சை ஒன்றை துவக்கிவைத்திருக்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
அரசியல் சாசன சிக்கலே உருவாகலாம்
இங்கிலாந்து திருச்சபை ஒரு விவாகரத்தான நபரையோ, அல்லது மனைவிக்கு துரோகம் செய்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒருவரையோ இதுவரை மன்னராக முடிசூட்டியதில்லை என்று கூறியுள்ளார், ராஜ குடும்ப நிபுணரான Anthony Holden என்பவர்.
அதுவும் எந்த பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்தாரோ, அதே பெண்ணை ராணியாக வேறு முடிசூட இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
Image: Getty Images
ஆகவே, சார்லசின் துரோகமும் விவாகரத்தும், அவரது முடிசூட்டு விழாவுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறியுள்ளார் Anthony Holden.
மன்னராக முடிசூடுபவர் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியில் அவர் கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்வதாக உறுதியளிக்கவேண்டும். ஆனால், சார்லஸ் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டதால் அந்த உறுதிமொழியையே மாற்றி அமைக்கவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் சட்டங்கள் மாற்றப்படவேண்டும். நாடாளுமன்ற சட்டங்கள் மாற்றப்படுவதற்கு மன்னரின் அனுமதி வேண்டும். ஆனால், இங்கு மன்னரால்தான் பிரச்சினையே. ஆக, மொத்தத்தில் அரசியல் சாசன சிக்கலே உருவாகும் என்கிறார் Anthony Holden.
சார்லசின் துரோகமும் விவாகரத்தும்
சார்லஸ், 1981ஆம் ஆண்டு டயானாவைத் திருமணம் செய்தார். 1986ஆம் ஆண்டு அவருக்கும் கமீலாவுக்கும் தவறான உறவு துவங்கியது. ஆனால், 1992ஆம் ஆண்டுதான் அவர் டயானாவை விவாகரத்து செய்தார்.
அதாவது, தன் மனைவியுடன் வாழும்போதே சார்லஸ் கமீலாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அதை அவரே ஒப்புக்கொண்டார். ஆகவேதான் இப்படிப்பட்ட ஒருவரை மன்னராக முடிசூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார் Anthony Holden.
Image: UK Press via Getty Images