சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா... முக்கிய பிரபலங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவினை ஆடம்பரமாக கொண்டாட அரண்மனை வட்டாரங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முக்கிய பிரபலங்கள் பலர் மறுப்பு தெரிவித்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடம்பர விழா
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட இருக்கிறது. பல காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையை சார்லஸ் மன்னர் குறைத்துக்கொண்டாலும் விழாவானது ஆடம்பரமாகவே நடக்கவிருக்கிறது.
@getty
மட்டுமின்றி, விண்ட்சர் கோட்டையில் முக்கிய பிரபலங்கள் பங்கேறும் இசை விழா ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இந்த இசை விழா தொடர்பிலேயே தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரண்மனையின் அழைப்பை ஏற்கனவே Ed Sheeran, Adele மற்றும் Robbie Williams ஆகியோர் மறுத்துள்ள நிலையில், தற்போது Elton John, the Spice Girls மற்றும் Harry Styles ஆகியோரும் தங்கள் நேரமின்மையை குறிப்பிட்டு, அழைப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
விண்ட்சர் கோட்டை இசை நிகழ்ச்சி
Olly Murs என்ற பாடகர் மட்டுமே தற்போது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சார்லஸ் மன்னருக்கான இசை நிகழ்ச்சியில் Gary Barlow, Mark Owen மற்றும் Howard Donald, Dannii Minogue, Andrew Lloyd Webber மற்றும் அமெரிக்க பாடகரான Lionel Richie ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் யார் யார் விண்ட்சர் கோட்டை இசை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்பது எதிர்வரும் நாட்களில் தான் உறுதி செய்யப்படும் என கூறுகின்றனர்.
@getty
முன்னதாக கடந்த ஜூன் மாதம் ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான Queen, Duran Duran, Diana Ross மற்றும் Alicia Keys ஆகியோர் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.