மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ்... இளவரசர் ஹரிக்கு காத்திருக்கும் பேரிடி

Queen Elizabeth II Prince Harry King Charles III
By Arbin Sep 18, 2022 09:56 AM GMT
Report

இளவரசர் ஹரி மட்டுமின்றி இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகிய இருவருக்கும் அது சிக்கலாகும்

மன்னரின் மனைவி, அரியணை ஏறவிருக்கும் வரிசையில் நால்வர் என ஐவர் மட்டுமே மன்னருக்கு ஆலோசகர்களாக முடியும்.

பிரித்தானிய மன்னராக முடிசூடவிருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ் தமது ஆலோசகர்களாக தற்போது செயற்பாட்டில் இருக்கும் ராஜகுடும்பத்து உறுப்பினர்களை தெரிவு செய்தால் அது இளவரசர் ஹரிக்கு பேரிடியாகும் என்றே தெரியவந்துள்ளது.

இளவரசர் ஹரி மட்டுமின்றி இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகிய இருவருக்கும் அது சிக்கலாகும் என்றே கூறப்படுகிறது. சார்லஸ் மன்னராக பொறுப்பேற்ற பின்னர் அதிரடி மாறுதல்கள் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ்... இளவரசர் ஹரிக்கு காத்திருக்கும் பேரிடி | King Charles Counsellors Harry Royal Family

@PA @getty

அதன் ஒருபகுதியாக மன்னரின் ஆலோசகர்கள் வட்டத்திலும் நடவடிக்கைகள் இருக்கும் என தெரியவந்துள்ளது. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் ஹரி, ஆண்ட்ரூ மற்றும் பீட்ரைஸ் ஆகியோரின் தற்போதைய பதவிகள் பறிக்கப்படும்.

1937 ரீஜென்சி சட்டத்தின் அடிப்படையில் மன்னரின் மனைவி, அடுத்து அரியணை ஏறவிருக்கும் வரிசையில் நால்வர் என ஐவர் மட்டுமே மன்னருக்கு ஆலோசகர்களாக இருக்க முடியும்.

ராணியார் ஆட்சியில், இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம், ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் ஆலோசகர்களாக இருந்தனர். தற்போது கமிலா ராணியாக முடிசூடவிருக்கும் நிலையில், அவரும் ஆலோசகர் வட்டத்தில் வருவார்,

மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ்... இளவரசர் ஹரிக்கு காத்திருக்கும் பேரிடி | King Charles Counsellors Harry Royal Family

@getty

மட்டுமின்றி ராணியார் மறைவுக்கு பின்னர் பதவி உயர்வு பெற்ற இளவரசி பீட்ரைஸ் ஆலோசகராக உட்படுத்தப்படலாம். ஆனால், ஆண்ட்ரூ, ஹரி மற்றும் பீட்ரைஸ் ஆகிய மூவரும் தற்போது செயல்பாட்டில் இல்லாத ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர்கள்.

இதனால், இவர்கள் மூவரையும் நீக்கிவிட்டு, மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், இளவரசர் எட்வார்ட் ஆகியோர் ஆலோசகர் வட்டத்தில் இணையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னராக முடிசூடவிருக்கும் சார்லஸ்... இளவரசர் ஹரிக்கு காத்திருக்கும் பேரிடி | King Charles Counsellors Harry Royal Family

இந்த ஆலோசகர்களின் பணி என்பது மன்னர் வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் போது அல்லது பணிக்கு திரும்ப முடியாமல் நோய்வாய்ப்பட்டிருக்கும் சூழல் ஏற்பட்டால் இந்த ஆலோசகர்களே மன்னருக்கான அலுவல்களை முன்னெடுப்பார்கள்.

மேலும் சட்டத்தின்படி, மன்னருடன் எப்போதும் இரு ஆலோசகர்கள் அரண்மனையில் இருக்க வேண்டும். தற்போதைய இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், மன்னர் நாடாளுமன்றத்தையே நாடவேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US