வாழப்போவது கொஞ்சம் காலம்தான்: ஹரி மேகன் பிள்ளைகளை சந்திக்கத் துடிக்கும் மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற தனது இளைய மகனான இளவரசர் ஹரியின் குடும்பத்தைச் சந்திக்க அவர் ஆர்வமாக இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பேரப்பிள்ளைகளை சந்திக்கத் துடிக்கும் மன்னர் சார்லஸ்
75 வயதாகும் மன்னர் சார்லசுக்கு, தன் இளைய மகனான ஹரியின் பிள்ளைகள், லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் அளவளாவும் வாய்ப்பு சரியாக அமையவில்லை.
Getty
தற்போது, தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க அவர் ஏங்கிக்கொண்டிருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் இனி வாழப்போகும் காலம் குறைவுதான் என்பதை நன்கு அறிந்துள்ள மன்னர் சார்லஸ், பால்மோரல் மாளிகையில் ஹரி மேகன் மற்றும் தனது பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி அவர் ஹரி மேகன் தம்பதியருக்கு பால்மோரலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் நிலையில், அவர்கள் நிச்சயம் அவரை சந்திக்க சம்மதிப்பார்கள் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |