மன்னர் சார்லஸ் மதிய உணவு சாப்பிடவே மாட்டாராம்: இதுவரை வெளிவராத புதிய தகவல்
மன்னர் சார்லசுடைய உணவுப்பழக்கம் குறித்து இதுவரை வெளிவராத சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் மன்னர்
தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக, மன்னர் சார்லஸ் கடைப்பிடிக்கும் நடைமுறைகளில் ஒன்று, அவர் மதிய உணவைத் தவிர்ப்பதாகும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மதிய உணவு என்பதே ஆடம்பரம் என்றும், அது தனது பிசியான வேலையின் நடுவே தொந்தரவாக இருக்கும் விடயம் என்றும் கூறுவாராம் மன்னர்.
இயற்கை விவசாயத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவரான மன்னர் சார்லஸ், தான் உண்ணும் உணவுப்பொருட்கள் பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை அதிகம் வெளியிடாதவையாக இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார் என்கிறார் ராஜ குடும்ப செய்தியாளர்களில் ஒருவரான Laura Bundock என்பவர்.
AP
மன்னர், வாரத்தில் இரண்டு நாட்கள் மாமிசம் அல்லது மீன் உண்ணுவதில்லை என்றும், வாரத்தில் ஒரு நாள் பால் பொருட்களைத் தவிர்ப்பதாகவும் தன்னிடம் விவரித்ததாக தெரிவித்துள்ளார் Laura.
ஒரு சிலர்தான் மன்னருடன் காலை உணவு அர்ந்திருப்பார்கள் என்று கூறும் Laura, அவர் காலையில் nuts மற்றும் seeds வகை உணவுகளை ரசித்து உண்ணுவார் என்கிறார். அத்துடன், அவருக்கு முட்டைகள் மற்றும் தேன் பிடிக்கும் என்றும், அதற்காக அவர் தனது கிளாரன்ஸ் இல்லம் மற்றும் Highgrove இல்லத்தில் தேனீ வளர்க்கிறார் என்னும் தகவல் உண்டு என்றும் கூறுகிறார் Laura.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |