பல மில்லியன் பவுண்டுகள் தொகையை மக்கள் நலனுக்காக செலவிட இருக்கும் மன்னர் சார்லஸ்
பிரித்தானிய ராஜகுடும்பத்தின் கிரவுன் எஸ்டேட் காற்றாலை ஒப்பந்தம் மூலமாக திரட்டப்படும் ஆதாயத்தை அப்படியே பொதுமக்கள் நலனுக்காக செலவிட மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் நலனுக்காக செலவிட
குறித்த தொகையை ராஜ குடும்பத்தில் செலவிடுவதற்கு பதிலாக மன்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கிரவுன் எஸ்டேட்டானது சமீபத்தில் ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான 6 காற்றாலை குத்தகை ஒப்பந்தங்களை செய்துகொண்டது.
@AP
இதில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் தொகையை ஆதாயமாக திரட்ட முடிவு செய்துள்ளது. ஆனால், நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்த மன்னர் சார்லஸ், தற்போது கிரவுன் எஸ்டேட் காற்றாலை ஒப்பந்தம் மூலமாக திரட்டப்படும் ஆதாயத்தை அப்படியே பொதுமக்கள் நலனுக்காக செலவிட முடிவு செய்துள்ளார்.
பொதுவாக பிரித்தானிய பொதுமக்களின் வரிப்பணத்தில் ஆண்டுக்கு 86.3 மில்லியன் பவுண்டுகள் ராஜகுடும்பத்திற்கு அளிக்கப்படும். மட்டுமின்றி, கிரவுன் எஸ்டேட்டில் இருந்து ஆண்டு வருவாயில் உபரி நிதியில் 25% மன்னருக்கு அளிக்கப்படும்.
இந்த நிலையில், புதிதாக திரட்டப்படும் வருவாயில் பொதுமக்கள் நலன் சார்ந்து செலவிட சார்லஸ் மன்னர் முடிவு செய்துள்ளார். இது பல மில்லியன் பவுண்டுகள் தொகையாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 312 மில்லியன் பவுண்டுகள்
கிரவுன் எஸ்டேட்டானது இங்கிலாந்தை ஆட்சி செய்யும் மன்னர் அல்லது ராணியாருக்கு சொந்தமானதாகும். ஆனால் அவர்கள் அதில் உரிமை கொண்டாட முடியாது. கிரவுன் எஸ்டேட்டில் இருந்து திரட்டப்படும் வருவாயில் ஆண்டுக்கு 312 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை ராஜகுடும்பம் அரசாங்க கருவூலத்தில் ஒப்படைத்து வருகிறது.
@getty
இதனிடையே, ராஜகுடும்பத்தின் வரவு செலவுகளை கவனிக்கும் Sir Michael Stevens என்பவர் பிரதமர் ரிஷி சுனக், நிதியமைச்சர் ஜெரெமி ஹண்ட் ஆகியோரை சந்தித்து, கிரவுன் எஸ்டேட் ஆண்டு தோறும் ஒப்படைக்கும் தொகையில் உரிய சலுகைகளை அளிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, காற்றாலை மூலமாக திரட்டப்படும் ஆதாயத்தை முழுமையாக பொதுமக்கல் நலன் கருதி பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதை பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.