வாழ்வில் முதன்முறையாக மதிய உணவு சாப்பிடும் மன்னர் சார்லஸ்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், மதிய உணவு சாப்பிடுவது இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், மதிய உணவு என்பது ஒரு ஆடம்பரம் என்று கூறி இத்தனை ஆண்டுகளாக மதிய உணவைத் தவிர்த்துவந்தார் சார்லஸ்.
வாழ்வில் முதன்முறையாக மதிய உணவு
இந்நிலையில், தற்போது மன்னர் மதிய உணவு சாப்பிடத் துவங்கியுள்ளார்.
அதற்குக் காரணம், அவருக்கு புற்றுநோய் தாக்கியதைத் தொடர்ந்து, அவரது மருத்துவர்களும், ராணி கமீலாவும் மதிய உணவு எடுத்துக்கொள்ளுமாறு மன்னரை வற்புறுத்தியுள்ளனர்.
ஆகவே, அவர் மதிய உணவு எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார்.
ஆனால், அவர் மதிய உணவாக என்ன சாப்பிடுகிறார் தெரியுமா? வெறும் பாதி அவக்கேடோ பழத்தை மட்டுமே மதிய உணவாக எடுத்துக்கொள்கிறார் சார்லஸ்.
அதுமட்டுமில்லை, பொதுவாகவே சார்லஸ், காலை உணவாகக் கூட பழங்கள், முட்டைகள் மற்றும் கார்ன் ஃப்ளேக் ஆகியவற்றைத்தான் எடுத்துக்கொள்வது வழக்கம்.
உலகத்தில் எத்தனையோ பேருக்கு சரியான உணவில்லை, அனைத்து வசதியும் இருந்தும், மன்னர் சார்லஸ் போன்றவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களைப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |