கமீலாவுடனான உறவு குறித்த மேலும் சில மோசமான தகவல்கள் வெளிவரலாம்: அச்சத்தில் மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரி தன் குடும்பத்தைக் குறித்து தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ள செய்திகளால் உலகம் அதிர்ந்துபோயுள்ள நிலையில், ஹரியிடமிருந்து மேலும் மோசமான தகவல்கள் வெளியாகலாம் என மன்னர் சார்லஸ் அச்சத்தில் இருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் தகவல்கள்தான் வெளியாகியுள்ளன
இளவரசர் ஹரி Spare என்னும் புத்தகத்தை வெளியிட்டபோது, தான் 800 பக்க புத்தகம் ஒன்றை வெளியிட இருந்ததாகவும், இப்போது 400 பக்க புத்தகம்தான் வெளியாகியிருப்பதாகவும், இரண்டாவது ஒரு புத்தகத்தை வெளியிடும் அளவுக்கு தன்னிடம் இன்னும் விடயங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஆகவே, முதல் புத்தகத்தில் ஹரி தன் தந்தையைக் குறித்த கொஞ்சம் தகவல்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், அவர் அடுத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டால் தன்னைக் குறித்து இன்னும் பல மோசமான தகவல்களை ஹரி வெளியிடலாம் என மன்னர் சார்லசுக்கு அச்சம் உருவாகியிருக்கலாம் என்றும் Tom Bower என்னும் ராஜ குடும்ப நிபுணர் தெரிவித்துள்ளார்.
Image: Getty Images
இன்னும் விடயங்கள் வெளிவரலாம்
இளவரசி டயானாவுடனான தன்னுடைய வாழ்க்கை, பிள்ளைகளுடனான தனது உறவு, கமீலாவுடனான முறைதவறிய உறவு என தன்னுடைய விடயங்களைக் குறித்து ஹரி கொஞ்சம்தான் தன்னுடைய புத்தகத்தில் இப்போதைக்குக் குறிப்பிட்டுள்ளார் என்பது சார்லசுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் Tom Bower.
தன் மனைவி டயானாவுடன் வாழும்போதே, வார இறுதி நாட்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும், தன் மகன் ஹரியை ஆயாவிடம் விட்டுவிட்டு, Highgrove இல்லம் என்னும் வீட்டில் கமீலாவுடன் நேரம் செலவிடச் சென்றுவிடுவாராம் சார்லஸ்.
ஆக, அந்த விடயங்களெல்லாம் அடுத்த புத்தகத்தில் வெளியிடப்படலாம் என்கிறார் Tom Bower.
Image: Getty Images