மன்னர் சார்லசின் முதல் அரசுமுறைப்பயணம்: சில தகவல்கள்...
மன்னரானபின் சார்லஸ் முதன்முறையாக அரசுமுறைப்பயணமாக இன்று ஜேர்மனி செல்கிறார்.
ரத்தான பிரான்ஸ் பயணம்
உண்மையில் மன்னர் முதல் அரசுமுறைப்பயணமாக பிரான்ஸ் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தங்கள் அதற்குத் தடையாக, அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
GETTY IMAGES
ஜேர்மனி பயணம்
சார்லஸ் இளவரசராக இருக்கும்போது 40 முறைகளுக்கும் மேல் ஜேர்மனிக்குச் சென்றுள்ளார். என்றாலும், அவர் மன்னரானபின் ஜேர்மனி செல்வது இதுவே முதல் முறையாகும்.
GETTY IMAGES
இந்த பயணத்தின் பின்னணியில் ஒரு முக்கிய காரணமும் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதாவது, பிரெக்சிட்டுக்குப் பின், ஐரோப்பாவுடனான உறவுகளை சீர்செய்வதற்கான பிரித்தானிய பிரதமர் ரிஷியின் நடவடிக்கைகளில் ஒன்று இது என அவர்கள் கூறுகிறார்கள்.
என்னென்ன திட்டம்?
இன்று, 29.3.2023 அன்று, ஜேர்மனி செல்லும் மன்னரையும் ராணியையும் ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier வரவேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.
GETTY IMAGES
நாளை, அதாவது, 30.3.2023 அன்று, ஜேர்மன் பெடரல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மன்னர் சார்லஸ். 31.3.2023 அன்று, Hamburg என்னுமிடத்திலுள்ள, இரண்டாம் உலகப்போரின்போது சேதமடைந்த தேவாலயம் ஒன்றைக் காண்பதற்காக செல்கிறார் மன்னர்.
EPA
GETTY IMAGES