மன்னர் சார்லசின் முன்னாள் காதலி ஒருவர் மரணம்
King Charles' former girlfriend dies aged 75: மன்னர் சார்லசின் முன்னாள் காதலி ஒருவர் தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
சார்லஸ் இளவரசி டயானாவைத் திருமணம் செய்யும் முன் பல இளம்பெண்களை காதலித்தவர் என்பது உலகமறிந்த விடயம்.
அப்படி அவர் காதலித்த பெண்களில் ஒருவர், சமீபத்தில் தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
யார் அந்தப் பெண்?
அவரது பெயர், டவீனா மார்லி. பிரபல தொழிலதிபர் ஒருவரின் பேத்தியான டவீனாவும், சார்லசும் 1960, 70களில் காதலித்துவந்துள்ளார்கள்.

அந்த காலகட்டத்தில் சார்லஸ் பல பெண்களுடன் பழகிவந்த நிலையில், சார்லஸ் டவீனாவை உருகி உருகி காதலிக்கத் துவங்க, கடைசியாக பிரித்தானியாவின் வருங்கால ராணியை சார்லஸ் கண்டுபிடித்துவிட்டார் என்றே அப்போது கருதப்பட்டதாம்.
ராஜ குடும்பத்திலுள்ளவர்களுக்கு டவீனாவை பிடித்துப்போன நிலையில், டவீனாவின் முன்னாள் காதலரான ஜேம்ஸ் பியர்ட் என்பவர் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சார்லசும் டவீனாவும் காதலிக்கத் துவங்கும் முன்பே, தானும் டவீனாவும் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்ததாக ஜேம்ஸ் கூற, ராஜ குடும்பத்துக்கு மருமகளாக வரும் ஒரு பெண் களங்கப்படாத ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என விதி உள்ளதால் சார்லஸ் டவீனாவை பிரிய நேர்ந்துள்ளது.
பின்னர் சார்லஸ் டயானாவை திருமணம் செய்துகொள்ள, டவீனா, ஜேக் மார்லி என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் குடும்பத்தினர் சூழ டவீனாவின் உயிர் அமைதியாக பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.