என்ன இருந்தாலும் அவரைப்போல வராது... மன்னர் சார்லஸ் கமீலா வருகை குறித்து பிரான்ஸ் மக்கள்
பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் பிரான்சுக்கு வருகை புரிந்துள்ளனர். என்றாலும், பிரான்ஸ் மக்களுக்கு பிரித்தானிய தலைவர்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
என்ன இருந்தாலும் அவரைப்போல வராது
பிரித்தானியாவின் தலைவராக மகாராணி இரண்டாம் எலிசபெத் இருந்தபோது, அவர் மீது பிரான்ஸ் மக்களுக்கு இருந்த ஆர்வம், தற்போது மன்னராக இருக்கும் சார்லஸ் மீது இல்லை.
மகாராணியாரைப் போன்ற வரலாற்று முக்கியத்துவம் சார்லசுக்கு இல்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் கருதுகிறார்கள். அவர் மகாராணியாரின் மகன் மட்டுமே, மேலும், மன்னருக்கும் ராணிக்கும் வயதாகிவிட்டது, அவர்களுக்கு பெரிதாக வரலாறு ஒன்றும் இல்லை என்கிறார் Mireille Mauve என்பவர்.
கமீலா ஈர்க்கவில்லை
மன்னர் மட்டுமல்ல, ராணி கமீலாவும் மக்களை ஈர்க்கவில்லை என்கிறார் Mireille Mauve. கமீலாவிடம் அந்த ஈர்க்கும் தன்மை இல்லை. பேசுவதும் டல்லாக பேசுகிறார். மொத்தத்தில், அவர் மீது பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை என்கிறார் அவர்.
வயதானவர்கள்தான் இப்படி சொல்கிறார்கள் என்றால், இளைய தலைமுறையின் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது. 15 வயதாகும் Alexia Aubert, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவோடு ராஜ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியத்துவத்துவத்தை இழந்துவிட்டன என்கிறார்.
ராணி எலிசபெத் மறைந்தபின் ராஜ குடும்பம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை என்று கூறும் Alexia Aubert, ராணி எலிசபெத்தைப் போல மன்னர் சார்லஸ் முக்கியமானாவராகவோ, ராஜ குடும்பத்தின் ஒரு அடையாளமாகவோ தோன்றவில்லை. ஆகவே, அவர் பிரான்ஸ் வருவது பெரிய விடயமாக தெரியவில்லை என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |