பெண்ணை எதிர்பார்த்து காத்து இருந்தேன்… இளவரசி சார்லோட் குறித்த மன்னர் சார்லஸின் எதிர்கால ஆசை

Thiru
in ஐக்கிய இராச்சியம்Report this article
மூத்த பேத்தி இளவரசி சார்லோட் குறித்த மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தான் உண்மையிலேயே பெண்ணை எதிர்பார்த்து கொண்டு இருந்ததாக சார்லஸ் மன்னர் பேச்சு.
வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மகளாகிய இளவரசி சார்லோட் குறித்த, தனது எதிர்கால ஆசையை மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளிப்படுத்தி இருந்த தகவல் தெரியவந்துள்ளது.
இளவரசர் வில்லியமிற்கு பிறந்த ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் இளவரசர் ஹரிக்கு பிறந்த ஆர்ச்சி மற்றும் லிலிபெட் சேர்த்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மொத்தம் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர், இவற்றில் மூத்த பேத்தி இளவரசி சார்லோட் ஆவார்.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனுக்கு 2015ல் சார்லோட் பிறந்த பிறகு, சில நாட்கள் கழித்து அப்போதைய வேல்ஸ் இளவரசராக இருந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், டோர்செட்டில் உள்ள பவுண்ட்பரிக்கு விஜயம் செய்தார்.
அப்போது மூத்த பேத்தி குறித்த தனது இனிமையான ஆசை ஒன்றை இளவரசராக இருந்த இருந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது நலம் விரும்பிகளிடம், தான் உண்மையிலேயே பெண்ணை எதிர்பார்த்து கொண்டு இருந்ததாகவும், சார்லோட்-டை அழகானவள் என்றும் விவரித்துள்ளார்.
அத்துடன் “நான் சிலிர்ப்பாக இருக்கிறேன், எனக்கு மிகவும் வயதான போது என்னைக் கவனித்துக் கொள்ள நான் ஒரு பேத்தியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்” அது நடந்துவிட்டது எனத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: புதிய குரலாக கட்சியை ஒன்றிணைப்பேன்: பிரதமர் பதவிக்கான போட்டியாளர் பென்னி மோர்டான்ட் வாக்குறுதி
ஒன்பது வயதான இளவரசர் ஜார்ஜுக்கு எதிர்கால ராஜாவுக்கான பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், இளவரசி சார்லோட் குறித்த மன்னரின் வருங்கால ஆசை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.