மன்னர் சார்லஸ் 6 மணிக்குமேல் வீட்டை விட்டு வெளியேற தடை: ஒரு சுவாரஸ்ய தகவல்
மன்னர் சார்லசுக்கு ஊரடங்கு அறிவிக்கப்படுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த ஊரடங்கை தனக்குத்தானே விதித்துக்கொண்டுள்ளார் மன்னர் என்பதுதான்.
6 மணிக்குமேல் ஊரடங்கு
அதாவது, மே மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லசுக்கு முடிசூட்டுவிழா நடைபெற உள்ளது. ஆகவே, 5ஆம் திகதி ஏதாவது பார்ட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளில் 74 வயதாகும் மன்னர் பங்கு கொள்வாரானால், அவர் களைப்படையக் கூடும். அந்தக் களைப்பின் தாக்கம் மறுநாள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே, தனது முடிசூட்டுவிழாவுக்கு முந்தைய தினம், அதாவது, மே மாதம் 5ஆம் திகதி, 6.00 மணிக்குமேல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என மன்னர் முடிவு செய்துள்ளார்.
Image: 2013 Getty Images
வேலை என்று வந்துவிட்டால், எதைக் குறித்தும் கவலைப்படாமல் தொடர்ந்து வேலை செய்துகொண்டேயிருக்கும் குணம் கொண்டவர் மன்னர். ஆகவே, அப்படி வேலை செய்து களைத்துப்போய்விடக்கூடாது என்பதற்காக, மே மாதம் 5ஆம் திகதி, மாலை 6.00 மணிக்குமேல் தன்னால் எந்த பணியிலும் ஈடுபடமுடியாது என அவர் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பார்ட்டிகளுக்கு 'No'
குறிப்பாக, பார்ட்டிகள் எதிலும் பங்குகொள்ள மன்னர் விரும்பவில்லை. தன்னை களைப்படையச் செய்யும் எந்த விடயத்தையும் செய்ய அவர் விரும்பாததால், அதாவது, முடிசூட்டு விழாவின்போது உற்சாகமாக காணப்படவேண்டுமென மன்னர் விரும்புவதால், தனக்குத்தானே இந்த 6.00 மணி ஊரடங்கை மன்னர் விதித்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
mylondon