உக்ரைன் ஜனாதிபதிக்கு ராஜவரவேற்பளித்த பிரித்தானிய மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு விண்ட்சர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்தார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கு வரவேற்பு
பிரித்தானியா வந்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு விண்ட்சர் மாளிகையில் ராஜ வரவேற்பளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி ஜெலன்ஸ்கிக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், உக்ரைன் தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டது. பின்னர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார் ஜெலன்ஸ்கி.

மன்னர் சார்லசும் உக்ரைனும்
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே உக்ரைனுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துவருபவர் மன்னர் சார்லஸ்.

இப்போதும், ஜெலன்ஸ்கியை மரியாதையுடன் வரவேற்று உபசரிப்பதன் மூலம் மன்னர் உக்ரைனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ஒரு வாரத்துக்குள் உக்ரைன் தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் மன்னர். லண்டனிலுள்ள உக்ரைன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது, உக்ரைன் தாய்மார்களையும் பிள்ளைகளையும் சந்தித்தது, என தொடர்ச்சியாக உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்துயுள்ளார் மன்னர்.
அத்துடன், வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் உக்ரைன் அகதிகளை சந்தித்தது, ஒவ்வொரு ஆண்டும் போர் துவங்கிய நாளில் உக்ரைனுக்கு கடிதங்கள் எழுதுவது என தொடர்ந்து உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திவருகிறார் மன்னர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |