மருமகளுக்கு யாரும் எதிர்பாராத பதவி உயர்வை வழங்கும் மன்னர் சார்லஸ்...
பிரித்தானியாவில், நாட்டின் ஆலோசகர்கள் என்னும் பொறுப்பு ஒன்று உள்ளது.
மறைந்த மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் கூட அந்த பொறுப்பை வகித்துள்ளார்.
பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது மருமகளும், வேல்ஸ் இளவரசியுமான கேட் மிடில்டனுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில், நாட்டின் ஆலோசகர்கள் அல்லது அரச ஆலோசகர்கள் என்னும் பொறுப்பு ஒன்று உள்ளது. மறைந்த மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் கூட அந்த பொறுப்பை வகித்துள்ளார்.
அந்த பெரிய பொறுப்பை, தன் மருமகளான கேட்டுக்கு கொடுக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளார்.
Image: PA
அதாவது, மன்னரும் ராணியும் அலுவல் காரணமாக வெளிநாடு சென்றிருந்தாலோ, அல்லது, மன்னருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலோ, அவருக்கு பதிலாக அரச கடமைகளைச் செய்வதற்கு இந்த அரச ஆலோசகர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
இதுவரை இந்த ஆலோசனைக் குழுவில் நான்கு பேர் மட்டுமே இருந்த நிலையில், மரபை உடைத்து மன்னர் சார்லஸ் ஆலோசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளார்.
image: POOL/AFP via Getty Images
அரச ஆலோசகர்களின் பட்டியலில் ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசி பீட்ரைஸ் ஆகியோர் பெயர் இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மன்னர், இளவரசி கேட் பெயரையும் இணைக்க முடிவு செய்துள்ளார்.
மேலும், இளவரசி ஆன் மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் பெயரையும் இணைக்கும் திட்டமும் உள்ளதாம்.
ஆக, மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து, குடும்பத்திலும் யாரையும் பிரிய விடுவதில்லை என மன்னர் சார்லஸ் முடிவு செய்துவிட்டதுபோலத் தெரிகிறது!
Image: Getty Images
Image: Getty Images