பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் மரணம்..அனுமதி அளித்த மன்னர் சார்லஸ்..அதிசயம் நடந்ததாக கலங்கிய தாய்
சாலையில் விபத்தில் கொல்லப்பட்ட சிறுவனை Graveyard கல்லறையில் புதைக்க மன்னர் சார்லஸ் சிறப்பு அனுமதி அளித்ததால், குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுவனின் மரணம்
பிரித்தானியாவின் Folkestone-யில் கடந்த 6ஆம் திகதி வில்லியம் பிரவுன் (7) என்ற சிறுவன் Peugeot வேன் மற்றும் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் Dymchurchயில் விபத்தை ஏற்படுத்திய உள்ளூர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Brown Family/Ferrari Press Agency
49 வயதான அவர் மீதான மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், அடுத்த ஆண்டு மார்ச் 6ஆம் திகதி காவல் நிலையத்திற்கு திரும்ப வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவன் வில்லியம் பிரவுனை அவனது தாய் செயின்ட் மேரி மற்றும் செயின்ட் ஈன்ஸ்வைத் தேவாலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என எண்ணி அதற்கான அனுமதிக்கு காத்திருந்தார்.
ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்த தேவாலயத்தின் மைதானத்தில் யாரும் புதைக்கப்படவில்லை. ஏனெனில் இது Privy Counsil-யின் உத்தரவால் மூடப்பட்டது.
இதன் காரணமாக மன்னர் சார்லஸிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் முடிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
Triangle news
மன்னர் சார்லஸ் அனுமதி
இந்த நிலையில் மூடப்பட்ட கல்லறையில் சிறுவனை அடக்கம் செய்ய மன்னர் சார்லஸ் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார்.
Samir Hussein/Wireimage
இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவனின் தாய் லாரா கூறுகையில், 'நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு அதிசயம் நாடாகும் என்று நான் காத்திருந்தேன், அது நடந்தது.
வில்லியமை அவன் முற்றிலும் விரும்பிய இடத்தில ஓய்வெடுக்க வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மன்னர் ஒரு நல்ல மனிதர், அவர் அற்புதமானவர் மற்றும் வெளிப்படையாக பாரிய இதயம் கொண்டவர். இப்போது நாங்கள் இறுதியாக வில்லியமை ஓய்வெடுக்க வைக்கலாம்' என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |