இன்னும் சில மணி நேரம்.... வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்திற்கு புறப்பட்டார் சார்லஸ் மன்னர்
முடிசூட்டு விழா நேரம் நெருங்கி வரும் நிலையில், சார்லஸ் மன்னர் மற்றும் ராணியார் கமிலா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்திற்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் முடிசூட்டு விழா
சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவிற்காக லண்டன் நகரம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. உலகமெங்கிலும் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்கள் லண்டனில் திரண்டுள்ளனர்.
இந்த நிலையில் முடிசூட்டு விழாவிற்கான அங்கி அணிந்து தமது காதல் மனைவி கமிலாவுடன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார் மன்னர் சார்லஸ்.
குதிரைகள் பூட்டிய வண்டியில் இருவரும் புறப்பட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் சுமார் 2 மணி நேரம் நீளும் சடங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
@PA
இந்த நிகழ்வுகளில் வேல்ஸ் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இவர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறிய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: Ian Vogler
ஹரியின் பிள்ளைகளுக்கு அழைப்பு இல்லை
ஆண்ட்ரூ தற்போது தமது சகோதரர் முடிசூட்டும் விழாவிற்காக வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்திற்கு பயணப்பட்டுள்ளார். இலவரசர் ஹரி ஏற்கனவே லண்டனில் வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்து, இந்த நிலையில் அவருக்கு முடிசூட்டு விழாவிற்கான சிறப்பு அங்கி அணிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Image: Daily Mirror
மேலும், தமது மகனின் நான்காவது பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் இளவரசர் ஹரி முடிசூட்டு விழா முடிந்ததும் கலிபோர்னியா புறப்பட்டு செல்வார் என்றே கூறப்படுகிறது.
மேலும், ஹரியின் பிள்ளைகள் எவருக்கும் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ராணியார் கமிலாவின் பேரப்பிள்ளைகள் இந்த விழாவில் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சிறு பொறுப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.
@PA