கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் வெளியிட்ட கிறிஸ்துமஸ் அட்டை: மகிழ்ச்சியில் லைக் போட்ட மன்னர் சார்லஸ்!
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டைக்கு மன்னர் சார்லஸ் மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் அட்டைப் படம்
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதி தங்களின் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டையை செவ்வாயன்று இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.
அதில் “இந்த வருட கிறிஸ்துமஸ் அட்டைக்காக குடும்பத்தின் புதிய படத்தைப் பகிர்கிறேன்!” என்று எழுதினர்.
Twitter @KensingtonRoyal
மன்னர் மூன்றாம் சார்லஸ்
இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் மற்றும் அவர்களது குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர் இருக்கும் அந்த அட்டைப் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், ஹார்ட் பொத்தானை அழித்து லைக் போட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மன்னர் சார்லஸ் கேட் மற்றும் வில்லியமின் புகைப்படத்தை ட்விட்டரில் மறு ட்வீட் செய்து, இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பகிர்ந்துள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்த நெட்ஃபிலிக்ஸ் ஆவணத்தொடரின் சமீபத்திய அத்தியாயங்களுக்கான டிரெய்லர் வெளியான மறுநாளே, கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் தங்கள் கிறிஸ்துமஸ் அட்டையைப் பகிர்ந்து கொண்டனர்.