நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி
King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.

மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி
இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |