பிரித்தானியாவில் 40 பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க உதவிய சார்லஸ் மன்னர்: நன்றி கூறும் பலர்
பிரித்தானியாவில் டசின் கணக்கான மக்கள் தங்களால் பெற்றோராக முடியாது என அஞ்சியிருந்த நிலையில், தற்போது தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் நிலைக்கு வந்துள்ளனர்.
ராயல் ஹெல்த் சர்வீஸ்
சார்லஸ் மன்னர் முன்னெடுத்து நடத்தும் ராயல் ஹெல்த் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலமாக தற்போது 40 பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
@shutterstock
கடந்த 5 ஆண்டுகளாக செயற்பாட்டில் இருந்து வரும் இந்த சேவையானது, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்க உதவி வருகிறது. கருவுறுதல் தொடர்பில் NHS அளிக்கும் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தியும்,
தனியார் சிகிச்சைகளுக்காக பெருந்தொகை செலவிட்ட பின்னரும் ஏமாற்றமே மிஞ்சிய பல பெண்கள் மன்னர் சார்லஸ் சார்பாக செயல்பட்டுவரும் மகப்பேறு சிகிச்சையை பயன்படுத்தியுள்ளனர்.
இலவசமாக முன்னெடுக்கப்படும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக உளவியல் ஆலோசனை, சமையல் வகுப்புகள் மற்றும் நடனப் பாடங்களும் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது, இந்த 5 ஆண்டுகளில் 40 குழந்தைகளை புதிதாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
எங்கள் வாழ்க்கையை மாற்றினார்
இந்த சிகிச்சையில் இணைந்து கொண்டவர்களில் சரிபாதி பேர்கள், இனி கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பே இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் எனவும், ஆனால் உரிய சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் தாயானதாக குறிப்பிடுகின்றனர்.
@reuters
Colin மற்றும் Stacey Forrest தம்பதி சுமார் இரண்டாண்டு காலம் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி போராடியுள்ளது. ஆனால் ராயல் ஹெல்த் சர்வீஸ் என்ற அமைப்பின் மூலமாக சிகிச்சை முன்னெடுத்த பின்னர் 2020 பிப்ரவரி மாதம் ஆண் மகனை பெற்றெடுத்துள்ளார்.
சார்லர் மன்னரை நாங்கள் ஒருமுறை கூட சந்தித்ததில்லை, ஆனால் அவர் எங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றினார் என்பதற்கு எங்கள் நன்றியை வார்த்தைகளால் தெரிவிக்க முடியாது என நெகிழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |