மன்னர் சார்லஸ் மதிய உணவு சாப்பிடுவதில்லை! அவரது டயட் குறித்து வெளியான தகவல்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர், மன்னர் மதிய உணவை சாப்பிடுவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ்
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் (King Charles III) தனது கடமைகளைச் செய்ய தொடர்ந்து பயணம் செய்கிறார். இந்நிலையில், ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மன்னரின் அசாதாரண காலை உணவு உட்பட அவர் பின்பற்றும் உணவு முறையை விளக்கினார்.
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டினா பிரவுன் (Tina Brown) தனது 'தி பேலஸ் பேப்பர்ஸ்' புத்தகத்தில், இளவரசர் வில்லியம் ஒருமுறை காலை உணவு பஃபேயில் விருந்தினர்களை தனது தந்தையின் ஆளிவிதை (linseed) காலை உணவிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரித்ததாகவும், பின்னர் இளவரசர் வில்லியம் விருந்தினர் ஸ்டீபன் ஃப்ரையிடம், மன்னர் சார்லஸின் காலை உணவான ஆளிவிதை "பறவை உணவு" போன்றது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Reuters
மன்னர் மதிய உணவு சாப்பிடுவதில்லை
மன்னர் சார்லஸின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் ஜூலியன் பெய்ன் (Julian Payne), மன்னர் மதிய உணவை சாப்பிடுவதே இல்லை என்று கூறினார்.
“மன்னர் மதிய உணவு சாப்பிடுவதில்லை; நான் அவரது பயணங்களில் உடன் செல்லும்போது நான் கற்றுக்கொண்ட ஆரம்ப பாடம் என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து செல்ல ஒரு பாரிய காலை உணவை உண்ண வேண்டும் அல்லது சில சிற்றுண்டி பார்களை உங்களுடன் கொண்டு வர வேண்டும்." என்று கூறினார்.
மேலும், "அவரது வேலை நாள் மிகவும் இடைவிடாது இருக்கும். ரேடியோவில் தலைப்புச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே பருவகால பழ சாலட், விதைகள் மற்றும் தேநீருடன் கூடிய காலை உணவில் தொடங்கும்" என ஜூலியன் பெய்ன் கூறினார்.
Mirrorpix
மன்னர் சார்லஸின் உணவு முறை
மன்னர் சார்லஸின் உணவு முறை பற்றி பேசிய முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் Signe Svanfeldt, "ஆளி விதை செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (ஒமேகா -3) ஆகியவற்றில் அதிகமாக உள்ளது. காலை உணவாக, மன்னர் சார்லஸ் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வதாக அறியப்படுகிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியில் பொதுவாக கம்பு மற்றும் ஸ்பெல்ட் மற்றும் சைலியம் அல்லது ஆளி விதை உள்ளிட்ட நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த விதைகள் போன்ற அதிக ஊட்டச்சத்து நிறைந்த மாவுகள் உள்ளன. புதிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள் கிங்கின் வைட்டமின், தாது மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவும்” என்று விளக்கினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.