மன்னர் சார்லசின் நாடாளுமன்ற உரை: கோபத்தை உருவாக்கியுள்ள புலம்பெயர்தல் குறித்த அறிவிப்புகள்
பிரித்தானியாவில் ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றம் துவங்கும்போது மன்னர் உரை ஆற்றுவது வழக்கம்.
தனது உரையில், அரசு அடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்து அறிவிப்பார் மன்னர்.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றம் துவங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றினார்.
புலம்பெயர்தல் குறித்த அறிவிப்புகள்
மன்னரின் அறிவிப்புகளில் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையிலேயே எதிர்ப்பை உருவாக்கிய ஒரு விடயம், புலம்பெயர்தல் மற்றும் புகலிடக்கோரிக்கை மசோதா ஆகும்.

அந்த மசோதா, புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் குடியமரும் நிலையைப் பெறுவதை கடினமாக்குகிறது.
அதே நேரத்தில், அகதி நிலையை ரத்து செய்வதை அந்த மசோதா எளிதாக்குவதுடன், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மக்களுடைய வரிப்பணம் உதவுவதை கட்டுப்படுத்துகிறது.
இவை பெரும்பாலும், உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் திட்டங்கள். ஆனால், ஷபானா அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |