ஜேர்மனி சென்றுள்ள மன்னர் சார்லசைக் குறித்த பயத்தில் ஜேர்மன் அதிகாரிகள் செய்த செயல்...
மன்னர் சார்லசே, தான் முன்னர் செய்த விடயங்களை மறந்திருந்தாலும், உலகம் அவற்றை மறக்காது போலிருக்கிறது.
ஆம், பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மனி சென்றுள்ள நிலையில், அவரைக் குறித்த பயத்தில் ஜேர்மன் அதிகாரிகள் சிலர் செய்த ஒரு விடயத்தைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரான உடனேயே கோபப்பட்ட சார்லஸ்
சார்லஸ் மன்னரானதுமே, அவர் செய்த சில செயல்கள் இணையத்தில் வைரலாகின. குறிப்பாக ஆவணம் ஒன்றைக் கையெழுத்திடுவதற்காக அவர் உதவியாளர் ஒருவரிடம் பேனா கொடுக்குமாறு முகத்தைச் சுளித்த விடயமும், வட அயர்லாந்துக்குச் சென்றிருந்தபோது குறிப்பேட்டில் எழுத அவருக்குக் கொடுக்கப்பட்ட பேனாவில் மை கசிய, அவர் கோபத்தில் கத்திய வீடியோவும் பிரபலமாகின.
Mirror
ஜேர்மன் அதிகாரிகள் செய்த விடயம்
தற்போது, மன்னர் சார்லசும், ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு அரசுமுறைப்பயணமாக சென்றுள்ளார்கள். மன்னர் சார்லஸ் வருகிறார் என்றதுமே, விருந்தினர் கையெழுத்திடும் புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக அதிகாரிகள் அவருக்குக் கொடுக்கப்பட இருந்த பேனாவை பல முறை பரிசோதித்து, அதில் பழுதொன்றும் இல்லை என்பதை உறுதி செய்தார்களாம்.
Image: Bernd von Jutrczenka/picture-alliance/dpa/AP Images
மன்னர் வருகை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஜேர்மன் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களின் தலைவரான Kai Baldow, தாங்கள் அந்த பேனாவை பரிசோதித்த விவரத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்ததுடன், எங்கள் பேனா எங்களை ஒருபோதும் கைவிட்டதில்லை என்று வேறு கூறினாராம்.
Image: The Daily Mirror
அவர் கூறியதுபோலவே, விருந்தினர் கையெழுத்திடும் புத்தகத்தில் மன்னர் கையெழுத்திடும்போது, அந்த பேனா பிரச்சினை எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
Mirror