மகாராணியார் இருந்த அறையில் மன்னர் சார்லஸ்: ரசிகர்கள் கண்களில் சிக்கிய அந்த காட்சி...
பால்மோரல் மாளிகையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண ஆளுநரான Linda Dessau என்பவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தைக் கண்ட ராஜகுடும்ப ரசிகர்கள் அந்த புகைப்படத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
பால்மோரல் மாளிகையில் பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் நின்ற அதே இடத்தில், மன்னராகப் பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
Image: Andrew Milligan - WPA Pool/Getty Images
ராஜகுடும்பத்தினர் எதைச் செய்தாலும் அதை கவனிக்கும் ராஜகுடும்ப ரசிகர்கள், அந்த புகைப்படத்திலிருந்து, அந்த அறையில் செய்யப்பட்டுள்ள ஒரு மாற்றத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆம், மகாராணியார் அந்த அறையில் விருந்தினர்களை சந்திக்கும்போது, அங்கு இரண்டு பச்சை நிற இருக்கைகள் இருந்தன. கூடவே, ஒரு மேசை மீது ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் அங்கு இருப்பதை மகாராணியார் நிற்கும் புகைப்படத்தில் காணலாம்.
Image: Andrew Milligan - WPA Pool/Getty Images
ஆனால், சார்லஸ் மன்னரானதும், அந்த அறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த பச்சை நிற இருக்கைகள் இரண்டு அகற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக இரண்டு சிவப்பு நிற இருக்கைகள் அங்கு போடப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த அறையிலிருந்த தொலைக்காட்சி பெட்டியும் அது வைக்கப்பட்டிருந்த மேசையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.
Image: Anwar Hussein/Getty Images