இளவரசர் ஹரியால் வில்லியமுக்கு பின்னடைவு: அரண்மனை வட்டாரம் கூறும் அதிர்ச்சி தகவல்கள்
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய விடயம் அனைவரும் அறிந்ததே.
என்றாலும், இன்னமும் அவரது சில செயல்பாடுகள் பிரித்தானிய மக்களுக்கும், ஏன் மன்னருக்கும் கூட பிடித்தவையாக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சில கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இளவரசர் ஹரியால் வில்லியமுக்கு பின்னடைவு
இளவரசர் ஹரி ராஜ குடும்ப உறுப்பினராக இல்லை. ஆனால், அவர் சமீபத்தில் பிரித்தானியாவுக்கு வந்தபோது அவர் செய்த செயல்கள் அனைத்தும், ஒரு ராஜ குடும்ப உறுப்பினரின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் போலவே இருந்ததை பலரும் கவனிக்கத் தவறவில்லை.
பொறுப்பிலிருக்கும் ஒரு இளவரசரைப் போல, ஹரி தொண்டு நிறுவனங்களை சந்தித்தார், விருதுகள் வழங்கினார், மட்டுமல்ல, சிறு பிள்ளைகளுக்கான தொண்டு நிறுவனமான Children in Need என்னும் அமைப்புக்கு 1.1 மில்லியன் பவுண்டுகளை அள்ளி வழங்கினார்.
ராஜ குடும்ப நிபுணரும், இளவரசி டயானாவின் தோழியுமான டினா ப்ரௌன் (Tina Brown) என்பவர், ஹரியே 1.1 மில்லியன் பவுண்டுகளை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அள்ளி வழங்கியுள்ள நிலையில், அது, ஆண்டொன்றிற்கு தனது எஸ்டேட்டிலிருந்து 23 மில்லியன் பவுண்டுகள் பெறும் இளவரசர் வில்லியம் என்ன செய்தார் என்னும் கேள்வியை உருவாக்கியுள்ளது என்கிறார்.
அதுமட்டுமில்லை, இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்தது உண்மைதான் என்றாலும், இப்போதைய சூழலில் ஹரியை விட வில்லியம்தான் மன்னருக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்துவதாக தன்னிடம் கூறப்பட்டதாக டினா கூறியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஏராளமான அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் மன்னர் சார்லஸ். ஆனால், இளவரசர் வில்லியமோ மன்னரை விட குறைவான நிகழ்ச்சிகளிலேயே பங்கேற்றுவருகிறார்.
தனது குடும்பத்துக்கு வில்லியம் கொடுக்கும் முக்கியத்துவமும் கவனித்துப் பார்க்கப்படுகிறது. மன்னர் சார்லஸ் தன் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை என கூறப்படும் நிலையில், வில்லியமுடைய நடவடிக்கைகள் மன்னருக்கு எரிச்சலூட்டுபவையாக உள்ளன என்றும் கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில், ராஜ குடும்பத்தில் இல்லாவிட்டாலும்கூட, ஹரியின் நடவடிக்கைகளால், குறிப்பாக அவர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியபோது அவருக்குக் கிடைத்த உற்சாக வரவேற்பும் அவரது பிரித்தானியப் பயணத்தின் வெற்றியும் வில்லியமுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |