ஆயுள் முழுக்க உங்களுக்காக... மூன்றாம் சார்லஸ் மன்னர் நாட்டுமக்களுக்கு உறுதி
ஆழமான துக்க உணர்வுடன் பேசுகிறேன், இழப்பின் உணர்வை, அளவில்லாமல், அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்
தாய்க்குக் கொடுக்கக் கூடிய இதயப்பூர்வமான மரியாதையை நாங்கள் அவருக்குச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, நாட்டின் மன்னராக முடிசூடவிருக்கும் மூன்றாம் சார்லஸ், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் இருந்து இன்று லண்டன் திரும்பியிருந்தனர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி காமிலா ஆகியோர். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரதமர் லிஸ் ட்ரஸ் உடனான சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். அதில், ஆழமான துக்க உணர்வுடன் இன்று உங்களிடம் பேசுகிறேன் என துவங்கிய மன்னர் சார்லஸ்,
எனது தாயார், பெருமதிப்புமிக்க ராணியார், அவரது வாழ்நாள் முழுக்க எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் குடும்பமும் தங்கள் தாய்க்குக் கொடுக்கக் கூடிய இதயப்பூர்வமான மரியாதையை நாங்கள் அவருக்குச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். மேலும், அவரது கனவு போல, ஆயுள் முழுக்க உங்களுக்காக பணியாற்றுவேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன் எனவும் சார்லஸ் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பொது வாழ்க்கையில், பாரம்பரியத்தின் மீதான நிலையான அன்பையும், முன்னேற்றத்தின் அச்சமற்ற அரவணைப்பையும் நாங்கள் கண்டோம், இது நம்மை மேன்மையான தேசமாக மாற்றியுள்ளது என்றார்.
@epa
எனது தாயாரின் நினைவாக நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் மற்றும் அவரது பொது வாழ்க்கையை நான் மதிக்கிறேன். அவருடைய மரணம் உங்களில் பலருக்கு மிகுந்த சோகத்தைத் தருகிறது என்பதை நான் அறிவேன்,
மேலும் அந்த இழப்பின் உணர்வை, அளவில்லாமல், உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் சார்லஸ் மன்னர்.
@reuters