பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்

Prince Harry King Charles III
By Balamanuvelan Jul 11, 2026 06:14 AM GMT
Report

சார்லஸ் பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

பகையை மிஞ்சிய பாசம்...

ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார். 

பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர் | King Charles Meet Harry Kids After 4 Years

ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி மேகன் தம்பதியர், ராஜ குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.

ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.

ஒருபக்கம் ராஜ குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.

இந்நிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானிய வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி அவர் பிரித்தானியா வரும்போது மன்னரை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் மன்னர். 

இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்: குழாய்களில் தண்ணீர் பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை

இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்: குழாய்களில் தண்ணீர் பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை

அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.

சந்திப்பு நிகழ்ந்த இடம்

விடயம் என்னவென்றால், இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர் | King Charles Meet Harry Kids After 4 Years

இந்த ஹைக்ரோவ் இல்லம், லண்டனிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.

எதனால் இப்படி ஒரு ரகசிய சந்திப்பு?

மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.

அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான். அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.

அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. 

பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர் | King Charles Meet Harry Kids After 4 Years

மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.

அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது கூடுதல் சிறப்பு! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US