இளவரசர் ஹரியை தவிர்த்து டேவிட் பெக்காமை தனியாக சந்தித்த சார்லஸ் மன்னர்: அம்பலமான ரகசியம்
நோயாளியான தந்தையை சந்திக்க லண்டன் திரும்பிய இளவரசர் ஹரியை தவிர்த்து, முன்னாள் கால்பந்து நட்சத்திரமான டேவிட் பெக்காமை சார்லஸ் மன்னர் தனியாக சந்தித்துள்ள தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சொந்த மகனை சந்திக்க மறுத்தார்
சார்லஸ் மன்னர் வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால், அவரால் உரிய நேரம் ஒதுக்க முடியாது என குறிப்பிட்டு லண்டன் திரும்பிய சொந்த மகனை சந்திக்க மறுத்தார்.
ஆனால் அதேவேளை தமது தொண்டு அமைப்புகள் தொடர்பில் டேவிட் பெக்காமை நேரில் சந்தித்து விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால், இளவரசர் ஹரியுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது என்றே கூறப்பட்டது.
அதையே இளவரசர் ஹரியும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் டேவிட பெக்காம் மற்றும் சார்லஸ் மன்னரும் எங்கே சந்தித்துக் கொண்டார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை, அத்துடன் அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை.
சொந்த மகன் நாடு திரும்பி, சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை நிராகரித்து முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணித் தலைவரை மன்னர் சந்தித்துள்ளது, தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
அரண்மனை நிர்வாகம்
இளவரசர் ஹரியின் லண்டன் பயணமானது சில மாதங்கள் முன்னரே முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பும் வெளியாகியிருந்தது. ஆனால் ராணுவ கல்லூரியில் சார்லஸ் மன்னர் விஜயம் மேற்கொண்டது, நிகழ்ச்சியில் இல்லாத எதிர்பாராத சம்பவம் என்றே கூறப்பட்டது.
மட்டுமின்றி, உரிய முறைப்படி Invictus போட்டிகளின் பத்தாவது ஆண்டு விழா தொடர்பில் தனது தந்தையை இளவரசர் ஹரி செயின்ட் பால் கதீட்ரலுக்கு அழைத்திருந்தார். அந்த ஆராதனையிலும் சார்லஸ் மன்னர் கலந்துகொள்ளவில்லை.
ஹரி மற்றும் சார்லஸ் மன்னர் இருவரும் சில மைல்கள் தொலைவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஏன் நேரிடையாக சந்திக்கவில்லை என்ற கேள்விகளுக்கு அரண்மனை நிர்வாகம் பதிலளிக்கவும் மறுத்துள்ளது.
இதனிடையே, நைஜீரியாவுக்கு பயணமான ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |