பல ஆண்டுகளாக பேரப்பிள்ளைகளைப் பார்க்காமல் தவிக்கும் மன்னர் சார்லஸ்: ஆனால்
தனது இளைய மகனான இளவரசர் ஹரியின் பிள்ளைகளை பல ஆண்டுகளாக பார்க்காமல் மன்னர் சார்லஸ் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மனவருத்தத்தில் இருக்கும் மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரி தன் மனைவி மேகனுடன் பிரித்தானியாவை விட்டுச் செல்லும்போது, அவருடைய மூத்த மகனான ஆர்ச்சிக்கு ஒரு வயது கூட முடிந்திருக்கவில்லை.
இப்போது ஆர்ச்சிக்கு வயது ஆறு.
ஆக, மன்னர் சார்லசால் தன் பேரனுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை.
ஹரியின் இரண்டாவது மகளான லிலிபெட்டுடனோ நேரம் செலவிட அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
ஆக, அவர்கள் இருவரையும் பார்க்காததால், அவர்கள் ராஜ குடும்பத்துக்குள், தங்கள் அருகில் வளராமல் வேறு எங்கோ வளர்வதால், மன்னர் சார்லஸ் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
என்றாலும், மன்னரைப் பொருத்தவரை அவருக்கு தன் கடமைதான் முக்கியம். ராஜ குடும்பத்தின் நிலைத்தன்மை மற்றும் எதிர்காலம் மீதுதான் அவரது முன்னுரிமை என்கிறார்கள் ராஜ குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
பிரச்சினைகள் தீர்ந்து பிள்ளைகள் ஒன்றாக இருக்கவேண்டும் என அவருக்கு ஆசைதான். ஆனால், அதற்கு ஹரி, தான் நம்பிக்கைக்குரிய நபர் என்பதை நிரூபிக்கவேண்டும்.
ஆக, ஒருபக்கம் பேரப்பிள்ளைகள் மிஸ் பண்ணுகிறார் மன்னர். மறுபக்கம், ராஜ குடும்பம் மீதான அக்கறை. இருந்தும், தன் மகனுக்காக அவரது கதவுகள் திறந்தே இருக்கின்றன.
ஹரி அவ்வப்போது தொலைபேசி மூலம் தந்தையை தொடர்புகொள்ள முயல்வதாக கூறப்படுகிறது.
ஆனால், அது போதாது என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள். அவர் வரவேண்டும், அவர் நேரில் வந்து தன் தந்தையை சந்திக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |