மன்னர் மூன்றாம் சார்லஸ் அன்றே இறந்துபோயிருப்பர்! வரலாற்று சம்பவத்தை நினைவுகூர்ந்த அரச பொறியாளர்
வரலாற்றில் மிகவும் லட்சியமான மற்றும் விலையுயர்ந்த கடல்சார் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று நடந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்த விபத்தை என்னால் மறக்க முடியாது என்று மன்னர் சார்லஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் 40 ஆண்டுகளுக்கு முன்பே பல லட்சம் மக்கள் தொலைக்காட்சி நேரலையை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே பெரும் விபத்தில் சிக்கி இருந்திருப்பார் என்று அரச பொறியாளர் ஒருவர் இப்போது தெரிவித்துள்ளார்.
1982 அக்டோபரில் மேரி ரோஸ் கப்பலின் அகழ்வாராய்ச்சியின் போது, சானல் 4 இன் புதிய ஆவணப்படத்தில், மன்னர் சார்லஸ் 'டிவியில் நேரலையில் மிகப்பாரிய விபத்தில் இறந்திருக்கலாம்' என்று அதிர்ச்சியூட்டும் தருணத்தை முன்னாள் அரச பொறியாளர் ஜாக் ஃப்ரோஸ்ட்நினைவு கூர்ந்தார்.
வரலாற்றில் மிகவும் லட்சியமான மற்றும் விலையுயர்ந்த கடல்சார் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று நடந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
அக்டோபர் 11, 1982 அன்று காலை தொலைக்காட்சியில் 60 மில்லியன் மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர். மன்னர் நான்காம் ஹென்றியின் போர்க்கப்பலான மேரி ரோஸ் ஆழக்கடலில் இருந்து மீட்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.
300 வருடங்களுக்கு மேல் மூழ்கிக்கிடந்த நிலையில் எலும்புகூடு போல் வெளியே வந்த கப்பல் போர்ட்ஸ்மவுத் கடற்படை கப்பல்துறைக்கு இழுத்துச்செல்லப்பட்டது. அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் மற்றும் கப்பலை வெளியே எடுத்த கப்பல் மற்றும் கிரேனுக்கு சொந்தக்காரரான ஆல்பர்ட் கிரான்வில்லி ஆகிய இருவரும் இந்த நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது சார்லஸ் இருந்த கப்பலை, வெளியே எடுக்கப்பட்ட கப்பல் பிரேமின் ஒரு முனை வேகமாக வந்து மோதியது.
கப்பல் விபத்துக்குள்ளானபோது, மன்னர் மூன்றாம் சார்லஸ் அருகில் உள்ள இடிபாடுகளைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் ராயல் இன்ஜினியர் ஜாக் ஃப்ரோஸ்ட் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "பிரித்தானியாவின் வருங்கால மன்னர் தொலைக்காட்சியில் நேரலையில் இறந்திருக்கலாம், இது மீட்புக்கான முழு அம்சத்தையும் மாற்றியிருக்கும்.
அந்த நேரத்தில் எல்லாம் மௌனமாகிப் போனது. ஒரு கிசுகிசுப்பு சத்தம் கூட இல்லை. அந்த நிமிடத்தில் உணர்ந்ததைப் பற்றி யாரும் பேசவில்லை, பத்து வினாடிகள் யாரும் நகர கூட இல்லை" என்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பேசிய சார்லஸ், 'சங்கிலிகள் கீழே விழுந்ததால், எல்லாம் என் தவறு என்று நினைத்தேன், சர்வ வல்லமை படைத்த இந்த விபத்தை என்னால் மறக்க முடியாது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இப்போது, 40-வது ஆண்டு நிறைவையொட்டி, Raising The Mary Rose: The Lost Tapes என்ற புதிய தொலைக்காட்சி ஆவணப்படம் வெளிவரும் நிலையில், இந்த சம்பவம் நினைவுகூரப்பட்டுள்ளது.
மேரி ரோஸ் என்றால் என்ன?
மேரி ரோஸ் போர்ட்ஸ்மவுத்தில் கட்டப்பட்ட நான்காம் ஹென்றியின் 'Army by Sea' போர்க் கப்பலாகும்.
1511-ல் பயணத்தை தொடங்கிய மேரி ரோஸ் 34 வருட வாழ்க்கையில் பிரான்ஸ் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போர்களில் பங்கேற்றது.
ஜூலை 19, 1545 அன்று, சோலண்ட் போரின் போது, மேரி ரோஸ் சுமார் 500 வீரர்கள் மற்றும் மாலுமிகளின் இழப்புடன் மூழ்கியது.