ராஜ குடும்பத்தில் ஒரு திருமணம்: செவிலியரை மணக்கும் இளவரசியின் மகன்
மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் மூத்த பேரனும், மன்னர் சார்லசின் தங்கை மகனுமான பீற்றர் பிலிப்ஸ் தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராஜ குடும்பத்தில் ஒரு திருமணம்
மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆனுடைய மகனான பீற்றர் பிலிப்ஸ், நேற்று, அதாவது, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதுடன், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவுக்கும் முறைப்படி தனது நிச்சயதார்த்தம் குறித்து தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய திருமண திகதி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
பீற்றர் பிலிப்ஸுக்கு ஏற்கனவே திருமணமாகி சவானா மற்றும் ஐஸ்லா பிலிப்ஸ் என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர் தனது முதல் மனைவியான ஆட்டம் பிலிப்ஸை 2021ஆம் ஆண்டு பிரிந்தார்.
அதேபோல, பீற்றர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஹாரியட் ஸ்பெர்லிங்கும் விவாகரத்தானவர்.
அவருக்கு அன்டோனியோ செயிண்ட் ஜான் ஸ்பெர்லிங் என்னும் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த ஒரு மகள் இருக்கிறார். ஹாரியட், ஒரு NHS செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |