பிரித்தானிய மன்னராக வேலையை தொடங்கிய சார்லஸ்! பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முதல் புகைப்படம்
ராணியின் மரணத்தைத் தொடர்ந்து வேலையில் இருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை பகிர்ந்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத்தும் இதே சிவப்பு பெட்டியுடன் படம்பிடிக்கப்பட்டார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முதன்முறையாக பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது புதிய அரசுப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
இந்த புகைப்படத்தில், மன்னர் சார்லஸ் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் காமன்வெல்த் ஆவணங்களைக் கொண்ட தனது அதிகாரப்பூர்வ சிவப்புப் பெட்டியைப் பார்ப்பது போல் தெரிகிறது.
அரச குடும்பத்தின் தொடர்ச்சியின் அடையாளமாக, மன்னர் மூன்றாம் சார்லஸின் மறைந்த பெற்றோர்களான ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் புகைப்படத்திற்கு முன்னாள் அவர் இருப்பது போல் படம் எடுக்கப்பட்டது.
His Majesty The King’s Red Box ?
— The Royal Family (@RoyalFamily) September 23, 2022
The Red Box contains papers from government ministers in the UK and the Realms and from representatives from the Commonwealth and beyond. pic.twitter.com/C4JrXHS3uO
அந்த புகைப்படம், 1951-ஆம் ஆண்டில் (எலிசபெத் ராணி ஆவதற்கு முன்பு) மன்னர் ஆறாம் ஜார்ஜூக்கு பரிசாக வழங்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் போது, அவர் தனது அதிகாரப்பூர்வ சிவப்பு பெட்டியுடன் படம்பிடிக்கப்பட்டார். இந்த பெட்டியானது ஒவ்வொரு மன்னரும் தங்கள் தனிப்பட்ட செயலாளரிடமிருந்து அதைப் பெறுவார்கள்.
எலிசபெத் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையில் பதினெட்டாம் நூற்றாண்டு அறையில் மன்னர் மூன்றாம் சார்லஸின் இந்த முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் எடுக்கப்பட்டது.