மேகனுக்கு மன்னர் சார்லஸ் வைத்த செல்லப்பெயர்! அதற்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணம்
மேகன் மெர்க்கலுக்கு சார்லஸ் வைத்த செல்லப்பெயர்.
எழுத்தாளர் Katie Nicholl எழுதிய The New Royals என்ற புத்தகத்தில் தகவல்.
தனது இரண்டாவது மருமகள் மேகன் மெர்க்கலுக்கு மன்னர் சார்லஸ் முன்னர் வைத்த புனைப்பெயர் குறித்து தெரியவந்துள்ளது.
அரச குடும்ப எழுத்தாளர் Katie Nicholl எழுதிய The New Royals என்ற புத்தகத்தில் தான் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி மேகன் மெர்க்கல் அரச குடும்பத்துக்குள் வருவதற்கு முன்னரே சார்லஸ் தனது வருங்கால மருமகளுக்கு Tungsten (டங்சுடன்) என புனைப்பெயர்/செல்லப்பெயர் (nickname) வைத்ததாக தெரிகிறது.
ஏனெனில் மீள்திறன், விடாபிடி குணம் கொண்டராக மேகன் இருந்தார் என்பதை குறிக்கும் வகையில் அந்த பெயரை வைத்தாராம். முக்கியமாக கடந்த 2018ல் நடைபெற்ற ராயல் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் இதை பலரும் பார்த்தனர் என கூறுகிறார் Katie Nicholl.
thenews.com.pk
அதாவது உதவியாளரின் கூற்றுப்படி மேகன் பலரையும் ஈர்க்கக்கூடிய மற்றும் திறமையான நபர் என்பதை கேட், வில்லியம் உள்ளிட்டவர்களும் உணர்ந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.