மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் நான்! DNA பரிசோதனை மூலம்... பகீர் கிளப்பும் நபர்
சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என கூறும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த Simon என்ற நபர்.
இது தொடர்பில் ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பாததால் தொடர்ந்து மெளனம்.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லி கொள்ளும் நபர் மீண்டும் அது குறித்து பேச தொடங்கியுள்ள நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதில் அளிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் வசிப்பவர் Simon Dorante-Day (56). இவர் சார்லஸ் - கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமீலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.
ஆனால் இளவரசர்கள் வில்லியம் - ஹரியின் தந்தையான மன்னர் சார்லஸ் Simon கூற்றுகளை புறக்கணித்து அது தொடர்பில் எதுவும் அறிக்கைகள் வெளியிடாமல் உள்ளார்.
asianetnews
ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை. சமீபத்தில் கூட Simon கமீலாவின் கர்ப்பகால புகைப்படம் என கூறி ஒரு புகைப்படத்தை கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர அவர் விரும்புவதாக தெரிகிறது. இருப்பினும், மன்னர் சார்லஸ் அவரது எந்த கூற்றுக்கும் பதிலளிக்கவில்லை.
marca