இளவரசர் ஹரியை மீண்டும் அழைத்து வருவீர்களா என கேட்ட இளைஞர்: மன்னர் சார்லசின் ஒற்றை வார்த்தை பதில்
இளவரசர் ஹரியை மீண்டும் அழைத்து வருவீர்களா என கேட்ட இளைஞரிடம் மன்னர் சார்லஸ் கேட்ட பதில் கேள்வி குறித்த செய்தி ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
இளவரசர் ஹரியை மீண்டும் அழைத்து வருவீர்களா?
சமீபத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸ், கிழக்கு லண்டனிலுள்ள Stratford பல்கலைக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு புதிய மருத்துவமனை திறப்பு முதலான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
அப்போது, ஒரு குறும்புக்கார இளைஞர், இளவரசர் ஹரியை மீண்டும் அழைத்து வருவீர்களா என மன்னரிடம் கேள்வி எழுப்பினார்.
Image: POOL/AFP via Getty Images
மன்னர் அளித்த பதில்?
அதற்கு மன்னர் சார்லஸ், யாரை? என்றார்.
அதாவது, முதலில் அவர் அந்தக் கேள்வியை கவனிக்கவில்லை. சில விநாடிகள் தாமதமாகவே அவருக்கு அந்த இளைஞரின் கேள்வி புரிய, சத்தமாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார் மன்னர் சார்லஸ்.
Image: POOL/AFP via Getty Images