மன்னர் சார்லஸ் வேண்டாம் என கூறும் நாடுகள்: அரண்மனை அளித்துள்ள பதில்
Buckingham Palace aides said King Charles would not fight a growing tide of republicanism: மன்னராட்சி வேண்டாம் என்று கூறும் காமன்வெல்த் நாடுகள் மீது மன்னர் சார்லஸ் கசப்பைக் காட்டப்போவதில்லை என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, க்ரெனாடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
14 நாடுகள்...
பிரித்தானியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை ஆண்ட நிலையில், இரண்டு வகையில் அவர்கள் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள்.

ஒன்று, சில நாடுகளைக் கைப்பற்றி அங்கிருந்த பூர்வக்குடியினரை ஓரங்கட்டிவிட்டு அங்கு தாங்கள் வாழத்துவங்கினார்கள். அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.
இரண்டாவது வகை, சில நாடுகளில் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சி செய்ய அமர்த்திவிட்டு, அங்கிருந்த செல்வத்தையும், மக்களையும், பிரித்தானியாவை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் அதற்கு உதாரணம்.
பின்னர் 65 நாடுகள் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றன. என்றாலும், இன்னமும் 14 நாடுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ்தான் இருக்கின்றன.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, அந்த நாடுகள் சிலவற்றிலும் மன்னராட்சியை முடிவுக்கு வரவேண்டும் என்ற கருத்து உருவாகத் துவங்கியுள்ளது.

குறிப்பாக கரீபியன் பகுதியில் இந்த கருத்து மேலோங்கத் துவங்கியுள்ளது.
அரண்மனை பதில்
சமீபத்தில் கரீபியன் நாடுகள் சிலவற்றிற்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார் மன்னர் சார்லஸ்.
அப்போது, தங்கள் மக்களை அடிமைகளாக்கியதற்காக மன்னர் மனிப்புக் கேட்கவேண்டும், பிரித்தானியா இழப்பீடு செலுத்தவேண்டும் என்பது போன்ற பேச்சுகள் எழுந்தன.

அதாவது, மன்னராட்சி வேண்டாம் என்னும் விடயம், நேரடியாக இல்லாமல் வேறு வகையில் வெளிப்பட்டது.
இந்நிலையில், மன்னர் சார்லஸ் தலைவராக இருக்கும் காமன்வெல்த் நாடுகள், மன்னர் சார்லஸ் தங்களுக்கு தலைவராக இருக்கவேண்டாம் என கருதும் நிலையில், அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள, மன்னர் தயாராக இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆகவே, நாடுகள் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் நிலையில், ராஜ குடும்பம் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளார்.
தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நாடுகளுக்கு சேவை செய்ய மன்னரும் ராஜ குடும்பத்தினரும் விரும்புகிறார்கள், அந்த நாட்டு மக்கள் விரும்பும் வரை அவர்களுக்கு ராஜ குடும்பத்தினர் சேவை செய்வார்கள்.
எப்போது அவர்கள் அதை விரும்பவில்லையோ, அப்போது அதை ராஜ குடும்பம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
அதுமட்டுமல்ல, அதற்குப் பிறகும், தங்கள் கட்டுப்பாட்டின் கீழிருந்து விலகிய நாடுகளுடன் வேறு வகையில் உறவுகளை தொடர்வார்கள். அப்போதும், அந்த நாடுகள் மீது மன்னரும் அவரது உதவியாளர்களும் கசப்புணர்வைக் காட்டப்போவதில்லை என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.