தம்பியுடன் பேசு... இளவரசர் வில்லியமுக்கு கட்டளையிட்ட மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரியுடன் பேசுமாறு இளவரசர் வில்லியமுக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உறவில் ஏற்பட்ட விரிசல்
இணைபிரியாத சகோதரர்களாக வலம் வந்த பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியின் உறவில், ராஜ குடும்பத்துக்குள் மேகன் வந்த பிறகு விரிசல் ஏற்பட்டது.
Image: Getty Images
தொடர்ந்து பல்வேறு காரணங்களால் விரிசல் பெரிதாகி, ஹரி, வீட்டை வீட்டும் பின் நாட்டை விட்டும் வெளியேறினார், தன் மனைவியுடன்.
பின்னர் ஹரியும் மேகனும் தொலைக்காட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அளித்த பேட்டிகள், ராஜ குடும்பத்துக்கும் ஹரி மேகன் தம்பதியருக்கும் இடையில் பெரும் பிளவை உருவாக்கிவிட்டன.
மன்னர் சார்லஸ் உத்தரவு
மகன் ஹரியின் மீது தவறு இருந்த நிலையிலும், ஒரு தந்தையாக மன்னர் சார்லஸ் ஹரியை விட்டுக்கொடுக்கவே இல்லை. சகோதரர்களை இணைக்க தன்னாலான முயற்சிகளை அவர் மேற்கொண்டவண்ணமே இருந்தார்.
இந்நிலையில், ஹரியுடன் பேசுமாறு மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியமுக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Image: Getty Images
அதைத் தொடர்ந்துதான், மகாராணியாரின் இறுதிச்சடங்கின்போது சகோதரர்கள் இருவரும் விண்ட்ஸர் மாளிகையில் சந்தித்து 40 நிமிடங்கள் அளவளாவிக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரி மேகன் தம்பதியரின் நெருங்கிய நண்பரான Omid Scobie, சந்தேகமேயில்லாமல், வரலாற்றில், சகோதரர்களுக்கிடையிலான உறவில் இது முக்கியமான ஒரு தருணம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |