இளவரசர் ஹரி மேகனுக்கு இளவரசி டயானாவின் வீட்டைக் கொடுக்க மன்னர் சார்லஸ் திட்டம்?
இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிராக்மோர் இல்லத்தைக் காலி செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பிரித்தானியாவுக்கு வரும்போது தங்குவதற்காக மாற்று ஏற்பாடு ஒன்றை மன்னர் சார்லஸ் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி மேகன் தம்பதியர் தங்க ஒரு அறை
ஹரியும் மேகனும் பிராக்மோர் இல்லத்தை விட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்கு பிரித்தானியாவில் தங்க ஒரு இடம் இருக்கவேண்டும் என மன்னர் சார்லஸ் கருதுகிறார்.
ஆகவே, அவர்களுக்கு இளவரசர் ஆண்ட்ரூவின் அறை கொடுக்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மன்னர் புனித ஜேம்ஸ் மாளிகையை ஹரி மேகன் தங்குவதற்காக ஏற்பாடு செய்யலாம் என்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
எப்படியும் மகனுக்கொரு தங்குமிடத்தை ஏற்பாடு செய்யவேண்டும் என்ற எண்ணம் மன்னர் சார்லஸ் மனதில் உள்ளதால், கென்சிங்டன் மாளிகையில் உள்ள, இளவரசி டயானா முன்பு வாழ்ந்த வீட்டை ஹரி மேகன் தம்பதியருக்குக் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிராராம் மன்னர் சார்லஸ்.
Image:- Reuters