மன்னர் சார்லஸ் இந்தியா செல்ல திட்டம்: புடினால் தடைபடுமா?
புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் பிரித்தானிய மன்னர் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
அவ்வகையில், மன்னரும் ராணியும் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுவருகிறார்கள்.
ரத்தான இந்திய பயணம்
ஏற்கனவே மன்னரும் ராணியும் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அப்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மன்னர் மற்றும் ராணிக்கு இந்தியாவில் விருந்தளிக்க விருப்பம் தெரிவித்திருந்திருக்கிறார்.
Image: EPA
சுற்றுப்பயணம், புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் மன்னருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள நிலையில், இந்திய சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கிடையிலான உறவையும் வலுப்படுத்துவதாக அமையும் என பிரித்தானிய அரசும் கருதுகிறது.
புடினால் மன்னரின் பயணத்திட்டம் தடைபடுமா?
ஆனால், உக்ரைன் போர் தொடர்பில், பிரித்தானியா உக்ரைனுக்கு தீவிர ஆதரவளித்துவருகிறது.
அதனால், பிரித்தானியாவை தாக்குவது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துவருகிறார்.
இந்தியாவோ, புடினுடன் நெருக்கம் காட்டிவருகிறது.
ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழலில் மன்னர் சார்லஸ் ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு செல்வது குறித்து கேள்வி எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
என்றாலும், இந்தியப் பிரதமர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ளதையும் பிரித்தானியா கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
எப்படி இருந்தாலும், சமீபத்தில் அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மன்னர் சார்லஸ் ராணி கமீலா தம்பதியர், நாடு திரும்பும் முன் கடந்த மாதம் ஒரு முறை இந்தியாவுக்கு திடீர் வருகை புரிந்தார்கள்.
ஆக, புடினால் மன்னர் ராணியின் இந்தியப் பயணத்திட்டம் தடைபடாது என்றே தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |