மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கே சென்று பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டம்; ஹரிக்கு கடைசி வாய்ப்பு
மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கே சென்று தன் மகனையும் பிள்ளைகளையும் சந்திக்க திட்டமிட்டுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர்
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியாவது தன் மகன் குடும்பத்துடன் ஒப்புரவாகிவிட விரும்புவதாக உறவுகள் நிபுணரான Louella Alderson என்பவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கே சென்று தன் மகன் ஹரி, மருமகள் மேகன் மற்றும் பேரப்பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்திக்க திட்டமிட்டுவருவதாக ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn தெரிவித்துள்ளார்.
இதுதான் ஹரிக்கு கடைசி வாய்ப்பு
இன்னொரு விடயம் என்னவென்றால், இளவரசர் ஹரியைப் பொருத்தவரை, அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பி வர இதுவே கடைசி வாய்ப்பு என்கிறார் Richard Eden என்னும் மற்றொரு நிபுணர்.
அதாவது, மன்னர் சார்லஸ் மன்னராக இருக்கும்போதே ஹரி பிரித்தானியா திரும்பினால் நல்லது. இளவரசர் வில்லியம் மன்னராகிவிட்டால் ஹரி ராஜ குடும்பத்துக்கு திரும்பவோ, பொறுப்பு எதையும் பெறவோ அவர் அனுமதிக்கமாட்டார் என்றே கருதுகிறேன் என்கிறார் Richard Eden.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |