பிரித்தானியாவிற்கு வந்துள்ள ஓமன் சுல்தானை வரவேற்ற மன்னர் சார்லஸ் - அமைதி முயற்சிகளுக்கு பாராட்டு
King Charles Praises Oman’s Peace Efforts: பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள ஓமன் சுல்தானை மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்றார்.
ஓமன் சுல்தானை வரவேற்ற மன்னர் சார்லஸ் - அமைதி முயற்சிகளுக்கு பாராட்டு
பிரித்தானியாவின் வின்ட்சர் கோட்டையில் நடைபெற்ற அரச விருந்தில், மன்னர் சார்சல் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களை வரவேற்று, மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநிறுத்தும் அவரது முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

விருந்தில் உரையாற்றிய சுல்தான் ஹைதம், “மோதல்களால் நிரம்பிய பிராந்தியத்தில், ஓமன் தூதரக பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. பிரித்தானியா எப்போதும் எங்களுடன் இருந்துள்ளது” என்று கூறினார்.
மன்னர் சார்ல்ஸ், “ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமன் மேற்கொண்ட உயர்ந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஓமன் அனைத்து தரப்புகளுக்கும் நம்பகமான நடுநிலையாளராக செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்த வருகை, 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமன் சுல்தானின் முதல் அரச வருகை என்பதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஓமன், ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நடுநிலை வகித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் போரின் பின்னணியில் ஓமன் மேற்கொண்ட மத்தியஸ்த பங்கு, பிராந்திய அமைதிக்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பேச்சுவார்த்தை
சுல்தான் ஹைதம், பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். விருந்தில் Shell, BP, Airbus நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், அரச குடும்பத்தினர் மற்றும் பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வருகை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்த சூழலில், ஓமன் அமைதி முயற்சிகளுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |