பிரச்சினை இருந்தாலும் ஹரி-மேகனை வெறுத்து ஒதுக்காத மன்னர் சார்லஸ்! சிக்கிய புகைப்படம்
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது விருப்பத்திற்கு ஏற்ப புதிய அரச குடும்ப புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைத்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனைக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸை மன்னர் சார்லஸ் வரவேற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ பல விடயங்களுக்காக வைரலாகிவருகிறது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலால் அரச குடும்பத்தில் குழப்பங்கள் நீடித்தாலும், மன்னர் சார்லஸ் தனது இளைய மகன் மற்றும் மருமகளின் புகைப்படத்தை விருப்பத்துடன் அரண்மனையில் பார்வைக்கு வைத்துள்ளார்.
மன்னர் சார்லஸ் புதன்கிழமை லண்டனுக்குத் திரும்பியதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
அப்போது அரண்மனையின் அறை ஒன்றிற்குள் லிஸ் டிரஸ்ஸை மன்னர் வரவேற்றார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் சிறிய காட்சியை ஐடிவி நியூஸ் வெளியிட்டது.
வெறும் 15 நொடிகள் கொண்ட காட்சியில், அரண்மனைக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில குடும்ப புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அவற்றில் ஒரு புகைப்படத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸின் மகன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் திருமணத்தில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
2018-ல் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவர்களின் திருமண விழா நடந்தது. இந்த புகைப்படத்தில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கன்சார்ட் கமிலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் உட்பட தம்பதியினரின் நெருங்கிய குடும்பத்தினர் உள்ளனர்.
Twitter@KensingtonRoyal
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது விருப்பத்திற்கு ஏற்ப புதிய அரச குடும்ப புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலால் அரச குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் இருந்தாலும், மன்னர் தனது இளைய மகன் மற்றும் மருமகளின் புகைப்படத்தை வெறுத்து ஒதுக்காமல் அரண்மனையில் வைத்திருப்பத்தை அரச குடும்ப ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
NEW VIDEO: King Charles holds the first of his weekly audiences with Prime Minister Liz Truss.
— Chris Ship (@chrisshipitv) October 12, 2022
It happened today at Buckingham Palace pic.twitter.com/VibppWrT8C
அந்த அறையில், மேலும் சில புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு மேசையில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் மறைந்த ராணிஎலிசபெத்துடன் மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம், ஜார்ஜ் உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது.