இளவரசி டயானாவை மணப்பதற்கு சில நிமிடம் முன் கமிலாவை ஏக்கத்தோடு பார்த்த மன்னர் சார்லஸ்! டயானா சொன்ன வார்த்தை
சார்லஸ் - டயானா திருமணத்தில் பங்கேற்ற கமிலா.
திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் வரை கமிலாவை வருத்ததோடு சார்லஸ் பார்த்ததாக கூறும் நிபுணர்
சார்லஸும், டயானாவும் திருமணமே செய்திருக்க கூடாது என அரச நிபுணர் பென்னி ஜுனோர் கூறியுள்ளார்.
பிரித்தானிய மன்னர் சார்லஸும், இளவரசி டயானாவும் கடந்த 1981ல் திருமணம் செய்த நிலையில் 1996ல் விவாகரத்து செய்தனர். விவாகரத்து செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இப்படி மனம் ஒத்து போகாமல் தான் தம்பதியின் திருமண வாழ்க்கை இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் சார்லஸுக்கும் கமிலாவுக்கும் இருந்த காதல்..! டயானாவை மணப்பதற்கு முன்னரே கமிலாவுடன் சார்லஸுக்கு காதல் இருந்த நிலையில் அப்போது திருமணத்தில் கைகூடவில்லை.
பின்னர் 2005ல் தான் சார்லஸ் - கமிலா திருமணம் நடைபெற்றது. சார்லஸ் - டயானா திருமணத்தில் கமிலாவும் கலந்து கொண்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? அது தொடர்பில் அரச குடும்ப நிபுணர் பென்னி ஜுனோர் கூறுகையில், டயானாவுடன் திருமணம் நடக்கவிருந்த இறுதி நிமிடம் வரை அவரை மணக்க சார்லஸ் விரும்பவில்லை.
pinterest/
அந்த சமயத்தில் கூட அங்கிருந்த கமிலாவை வருத்தம் மற்றும் ஏக்கம் கொண்ட உணர்வுடன் சார்லஸ் பார்த்தார். அவர் தவறு செய்கிறார் என்பதை சார்லஸ் அறிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆனால் அது மிகவும் தாமதமானது.
அதாவது அவருக்கு திருமணத்தை நிறுத்தும் தைரியம் இல்லை, அந்த நிலையில் யாருக்கு தான் தைரியம் இருக்கும். டயானாவும், திருமணத்திற்கு சற்று முன்பு, அவள் தன் சகோதரிகளிடம், என்னால் இதைச் செய்ய முடியாது என்று சொன்னாள், ஆனால் இது தாமதமானது என அவர்கள் கூறினர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்திருக்கவே கூடாது, இவர்களின் திருமணம் இரண்டு ரயில்கள் மோதி கொண்டது போன்றது என கூறியுள்ளார்.