சிவந்த கண்களுடன் மன்னர் சார்லஸ்... விளக்கம் அளித்த அரண்மனை
வின்ட்சர் அரண்மனையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேன்ரானை வரவேற்ற மன்னர் சார்லஸ் சிவந்த கண்களுடன் காணப்பட்டார்.
அரண்மனை விளக்கம்
ஜனாதிபதி மேக்ரானை வரவேற்க மன்னர் சார்லஸுடன் ராணி கமிலா, கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் மன்னர் சார்லஸ் சிவந்த கண்களுடன் காணப்பட்டது, அவரது உடல்நிலை குறித்து புதிய கவலைகளை எழுப்பியது.
குறித்த புகைப்படம் சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்க்கவும், பக்கிங்ஹாம் அரண்மனை உடனடியாக விளக்கம் ஒன்றை வெளியிட்டது, மன்னரின் ஒரு கண்ணில் இரத்த நாளம் வெடித்ததை தெளிவுபடுத்தியது.
அரண்மனை மேலும் கூறுகையில், மன்னரின் தற்போதைய புற்றுநோய் சிகிச்சை உட்பட இதற்கு தொடர்பில்லை என்றும் கூறியது. கண்ணில் இரத்த நாளம் வெடிப்பது, மருத்துவ ரீதியாக சப் கான்ஜுன்க்டிவல் ரத்தக்கசிவு என்று அழைக்கப்படுகிறது,
இது பொதுவாக கவலைப்பட ஒன்றுமில்லை. இது எந்த வெளிப்படையான காயமும் இல்லாமல் ஏற்படுகிறது மற்றும் வலுவான தும்மல் அல்லது இருமல் போன்ற எளிமையான ஒன்றால் ஏற்படலாம். அவை பொதுவாக ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் தானாகவே போய்விடும் என்றே Mayo Clinic விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |