கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ்

Donald Trump United States of America Canada King Charles III
By Balamanuvelan Apr 30, 2026 04:58 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணத்துக்கு திட்டமிட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மன்னரை கேலி செய்துவிடுவாரோ அல்லது அவமதித்துவிடுவாரோ என்ற அச்சம் பிரித்தானிய தரப்புக்கு இருந்தது.

இப்போது பார்த்தால், எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஆம், மன்னர் சார்லஸ்தான் ட்ரம்பை கேலி செய்துகொண்டிருக்கிறார்!

சொல்லவேண்டியதை எல்லாம் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்ட மன்னர்

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாகக் கூறி கனேடியர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். 

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ் | King Charles Reminds Smile He Is Head Of Canada

அப்போதெல்லாம், தங்கள் நாட்டின் தலைவர் என்னும் முறையில், மன்னர் சார்லஸ் ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கவில்லையே என்னும் ஆதங்கம் கனேடியர்கள் பலருக்கு இருந்தது.

ஆனால், மன்னர் ஒன்றும் அமைதியாக இல்லை, அவர் தக்க தருணத்துக்காக காத்திருந்தார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

ஆம், ட்ரம்ப் அளித்த அரசு விருந்தில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், கனடாவின் தலைவர் தான்தான் என்பதை சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.

இன்னும் சில வாரங்களில், அமெரிக்காவும் கனடாவும், (மெக்சிகோவுடன்) FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்த உள்ளன. 

உணவின் சுவையா, தரமா எது முக்கியம்? ஆய்வில் கனேடியர்கள் அளித்த எதிர்பாராத பதில்

உணவின் சுவையா, தரமா எது முக்கியம்? ஆய்வில் கனேடியர்கள் அளித்த எதிர்பாராத பதில்

ஒரு வகையில் கூறினால், அந்தந்த நாட்டின் தலைவர் என்னும் முறையில், நாம் இருவரும் கால்பந்து போட்டியை இணைந்து நடத்த இருக்கிறோம் என்றார் மன்னர் சார்லஸ்.

அதாவது, அமெரிக்காவின் தலைவர் நீங்கள், கனடாவின் தலைவர் நான், ஆக, இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணைந்து FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்த இருக்கிறோம் என்று கூறினார் சார்லஸ். 

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ் | King Charles Reminds Smile He Is Head Of Canada

அது மட்டுமல்ல, இன்னும் ஒரு படி மேலே சென்று, ட்ரம்ப் வெறும் அமெரிக்காவுக்கு மட்டும்தான் தலைவர். தான் அப்படி அல்ல, தான் பல நாடுகளின் தலைவர் என்பதையும் பதிவு செய்துவிட்டார் மன்னர்.

போட்டிகளில் பங்கேற்கும் ஐந்து நாடுகளின் தலைவர் என்னும் முறையில் நானும் மிக்க ஆவலுடன் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிக்க இருக்கிறேன் என்றும் கூறிவிட்டார் மன்னர்.

மன்னர் சார்லஸ், பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மேலும் 14 காமன்வெல்த் நாடுகளுக்கும் மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னரின் உரை கனேடியர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆர்தர் (Arthur Milnes) என்னும் வரலாற்றாளர், மன்னர் சார்லஸ், கனடாவின் தலைவர் யார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி, தெளிவாக ட்ரம்புக்கு நினைவூட்டிவிட்டார்.

அதை அவர் நகைச்சுவையாக தெரிவித்ததன் மூலம், தன் கருத்தை திறம்பட முன்வைத்துவிட்டார் என்கிறார் ஆர்தர்.

ஒரு நாட்டின் மன்னர் என்னும் முறையில் சார்லஸ் சில விடயங்களை பேசலாம், சில விடயங்களை பேசக்கூடாது என விதி உள்ளது. ஆனால், மன்னர் சார்லஸ் தன் வாழ்நாள் முழுவதுமே ஒரு சமூக ஆர்வலராகத்தான் இருந்துவந்துள்ளார்.

ஆக, அவர் அரசியலில் தலையிடக்கூடாது என்றாலும், சொல்லவேண்டிய தன் கருத்தை எப்படி முன்வைப்பது என்பதை அவர் நன்கு அறிந்துவைத்துள்ளார் என்று கூறும் ஆர்தர், இந்த மனிதர் எதை பேசினாலும் கவனமாகத்தான் பேசுகிறார் என்றும் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US