அடிக்கடி பொறுமையிழக்கும் மன்னர் சார்லஸின் மற்றொரு முகம்! வைரலாகும் ஆச்சரிய வீடியோ
பிரித்தானியாவின் புதிய மன்னரான சார்லஸிடம் பீர் குடிக்கலாம் வாருங்கள் என இளைஞர் கேட்டதற்கு அவர் வேடிக்கையாக சிரித்தபடி அளித்த பதிலின் வீடியோ வைரலாகியுள்ளது.
பிரித்தானிய ராணியின் மறைவையடுத்து நாட்டின் மன்னராக அவரின் மகன் சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில் 73 வயதான மன்னர் சார்லஸ் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஏற்கனவே பதவியேற்பு விழாவின்போது ஆவணம் ஒன்றில் கையெழுத்திடும் முன் தனது உதவியாளரிடம் முகம் சுழித்தார். அடுத்து கையெழுத்திடுவதற்காக மன்னரிடம் கொடுக்கப்பட்ட பேனாவிலிருந்து மை கசிய, மன்னர் மீண்டும் பொறுமையிழந்த வீடியோ வைரலானது.
Throw back to when a random bloke asked King Charles to go for a beer. ?
— James ‘conservative’ NOT Tory (@JamesHesp) September 12, 2022
pic.twitter.com/Lg6XjS1liG
இந்த நிலையில் தற்போது மன்னரின் இன்னொரு ஜாலியான முகத்தை காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் சார்லஸை பார்த்து ”பீர் குடிக்க போகலாமா” என்று கேட்கிறார். அதற்கு “என்ன?” என்று மன்னர் கேட்க, மீண்டும் அதே கேள்வியை இளைஞர் கேட்டார்.
இதையடுத்து சார்லஸ் "எங்கே போகலாம்" என்று கேட்டு இளைஞரை அசரடித்தார். இதை கேட்ட அங்கிருந்த கூட்டத்தினர் சிரித்தனர், அப்போது பீர் குடிப்பதற்கு எதாவது ஒரு இடத்தை நீங்கள் சொல்ல வேண்டும்" என்கிறார் சார்லஸ்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை. இது கடந்த ஜூலை மாதம் அவர் இளவரசாக இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
அந்த வீடியோவில் சார்லஸிடம் பேசிய இளைஞரின் பெயர் டேனியல் வால்கர் என தெரியவந்துள்ளது.