சிகிச்சைக்காக மீண்டும் லண்டன் திரும்பினார் மன்னர் சார்லஸ்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக மீண்டும் லண்டன் திரும்பியதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு புரோஸ்ட்ரேட் சுரப்பியில் வீக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் புரோஸ்ட்ரேட் பிரச்சினைக்கான சிகிச்சையில் இருக்கும்போது, அவருக்கு வேறு ஒரு பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
Credit: PA
அது என்ன என மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது, அது ஒருவகை புற்றுநோய் என தெரியவந்தது. அது என்ன வகை புற்றுநோய் என தெரிவிக்கப்படாத நிலையில், அது, புரோஸ்ட்ரேட் தொடர்பான புற்றுநோய் அல்ல என்று மட்டும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மன்னருக்கு முதல் கட்ட சிகிச்சைகள் துவங்கின. அந்த சிகிச்சைகளுக்குப் பிறகு, ஓய்வெடுப்பதற்காக மன்னரும் ராணி கமீலாவும் Sandringhamக்கு சென்றார்கள்.
Credit: PA
மீண்டும் லண்டன் திரும்பினார் மன்னர் சார்லஸ்
இந்நிலையில், இன்று காலை மீண்டும் லண்டன் திரும்பியுள்ளார் மன்னர். மன்னரும் ராணியும் ஹெலிகொப்டரில் பக்கிங்காம் அரண்மனையை வந்தடைந்தார்கள்.
அதன்பின் அவர்கள் காரில் கிளாரன்ஸ் இல்லத்துக்குச் சென்றார்கள். அவர் அடுத்த கட்ட சிகிச்சைக்காக லண்டன் திரும்பியுள்ளதாக கருதப்படுகிறது.
Credit: PA
மன்னராக பொறுப்பேற்ற புதிதில் கூட எரிச்சல் முகம் காட்டிய மன்னர், தனக்கு புற்றுநோய் என தெரிந்த பிறகு எவ்வித எதிர்மறையான உணர்ச்சிகளையும் தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.
தன்னைக்காண வந்த மக்களை நோக்கி புன்னகையுடனும், உற்சாகத்துடனும் கைகளை அசைத்து அவர்களுடைய வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் மன்னர்.
Credit: PA
மன்னர் சார்லஸ் ஹெலிகொப்டரில் வந்திறங்கி, ராணி கமீலாவுடன் லண்டன் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Credit: Louis Wood
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |