எலிசபெத் ராணியாரைவிட பெரும் பணக்காரர்... சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு வெளியானது
பிரித்தானியாவின் சார்லஸ் மன்னர் மறைந்த தமது தாயார் எலிசபெத் ராணியாரை விடவும் பணக்காரர் என உத்தியோகப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
258வது இடத்தில்
பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் 74 வயதாகும் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 258வது இடத்தில் உள்ளார். அவரது தாயார் மறைந்த எலிசபெத் ராணியாரின் சொத்து மதிப்பானது 468 மில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த ஓராண்டில் சார்லஸ் மன்னரின் சொத்து மதிப்பில் 12 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, கடந்த 1996ல் இளவரசி டயானா விவாகரத்து பெற்றுக்கொண்டபோது சுமார் 22.5 மில்லியன் டொலர் சார்லசிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
உண்மையான சொத்து மதிப்பு
மன்னர் சார்லஸ் தமது Cornwall எஸ்டேட்டில் இருந்து 2011 மற்றும் 2022 வரையான பத்தாண்டு காலம் சுமார் 268 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளார். Cornwall எஸ்டேட் என்பது 1337ல் மூன்றாவது எட்வர்ட் மன்னரால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த எஸ்டேட்டானது தலைமுறையாக கைமாறப்பட்டு வருகிறது. தற்போது இந்த எஸ்டேட்டானது எலிசபெத் ராணியாரின் மறைவுக்கு பின்னர் இளவரசர் வில்லியம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த எஸ்டேட்டில் சார்லஸ் மன்னருக்கும் பங்குள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சொந்தமாக பல சொத்துக்கள் இருந்தும், அதில் இருந்து பல மில்லியன் டொலர் வருவாய் ஈட்டி வந்தாலும்,
ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய அரசாங்கமும் பொதுமக்கள் வரிப்பணத்தில் குறிப்பிட்ட தொகையை அரச குடும்பத்திற்கு அளித்து வருகிறது. மட்டுமின்றி, சார்லஸ் மன்னரின் அல்லது பிரித்தானிய அரச குடும்பத்தின் உண்மையான சொத்து மதிப்பு என்பது இதுவரை வெளிடிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |