சார்லஸ் மன்னர் ஆட்சிக்கு முடிவே இல்லை... பாபா வங்காவின் விசித்திரமான கணிப்பு
பாபா வங்கா கணித்துள்ளபடி சார்லஸ் மன்னர் ஆட்சிக்கு முடிவே இருக்காது
மன்னர் சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால், பாபா வங்காவின் கணிப்பு நிஜமாகும்
ரஷ்ரான பாபா வங்காவின் கணிப்பு ஒன்று நடந்தேறினால் பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆட்சிக்கு முடிவே இல்லை என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சார்லஸ் மன்னர் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால் மட்டுமே, பாபா வங்கா கணித்துள்ளபடி அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது என கூறப்படுகிறது.
@PA
பாபா வங்கா இதுவரை கணித்துள்ளவற்றில் தோராயமாக 85% நிறைவேறியுள்ளதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவரது கணிப்புகளில் ஒன்று, 2046க்கு பின்னர் மனித குலம் 100 வயதைக் கடந்து வாழும் என குறிப்பிட்டுள்ளார்.
அறிவியலின் வளர்ச்சி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளால் இது சாத்தியமாகும் எனவும் பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.
@sailymirror
இதன் அடிப்படையில், தற்போது மன்னர் சார்லசின் வயது 73, இன்னும் 24 ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தால், அதாவது 97 வயது வரையில் அவர் ஆட்சியில் இருந்தால் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளபடி கணிப்பு நிஜமாகும் என்கிறார்கள்.
ராணியார் இரண்டாம் எலிசபெத் 96 வயது வரையில் வாழ்ந்து, சமீபத்தில் காலமானார். இதனால் மன்னர் சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருக்க வேண்டும், என்றால் மட்டுமே பாபா வங்காவின் கணிப்பின் பலனை பெறமுடியும்.
@wikipedia
நவம்பர் 2010ல் மூன்றாம் உலகப்போர் மூளும் எனவும் அக்டோபர் 2014ல் அது முடிவுக்கு வரும் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார்.
இது நிறைவேறவில்லை என்றாலும், 2022ல் மாபெரும் பெருவெள்ளத்தால் பூமி பாதிப்புக்கு உள்ளாகும் என கணித்திருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் எனவும் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.