உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்று கேட்ட சிறுமிக்கு மன்னர் சார்லஸ் குறும்பாக அளித்த பதில்...
மகாராணியார் மரணத்துக்குப் பின் மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் இணைந்து முதன்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்கள்.
அப்போது மன்னரிடமே குறும்பாக கேள்வி ஒன்றை எழுப்பினாள் ஒரு சின்னஞ்சிறு பெண்.
சமீபத்தில் மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும், லண்டனிலுள்ள Walthamstow என்ற இடத்துக்கு சென்றிருந்தார்கள்.
அப்போது இருவரும் தங்களைக் காண கூடியிருந்த பள்ளிப் பிள்ளைகளை சந்தித்தார்கள்.
மன்னரைக் கண்டதும் பிள்ளைகள் உற்சாகம் அடைந்தார்கள்.
ஒரு பிள்ளை, ’அது மன்னர்’ என சத்தமிட, மற்றொரு பிள்ளை மன்னரிடமே ஒரு கேள்வியை எழுப்பினாள்.
’மன்னர் சார்லஸ் அவர்களே, உங்களுக்கு எத்தனை வயது?’ என அவள் கேட்க, மன்னரோ, ’எனக்கு என்ன வயது இருக்கும் என நீயே கணித்துக்கொள்’ என்றார்!
The King and Queen Consort are at their first joint engagement in London since the end of Royal Mourning at young engagement centre Project Zero, in Walthamstow, east London. pic.twitter.com/gQLxjKrHOK
— Matt Wilkinson (@MattSunRoyal) October 18, 2022